சுவையும் மணமும் நிறைந்த வெங்காயத்தின் வேறு பலன்கள்!

சுவையும் மணமும் நிறைந்த வெங்காயத்தின் வேறு பலன்கள்!

தினமும் உணவில் வெங்காயம் பல வகைகளில் பயன்படுகிறது வெங்காயத்திற்கு வேறு பலன்களும் உண்டு அவற்றையும் அறிந்து கொள்வோமே

நான்கைந்து சின்ன வெங்காயத்தை மென்று தின்று விட்டு சூடான வெந்நீர் ஒரு டம்ளர் பருகினால் ஜலதோஷம் போய்விடும்.

துருப்பிடித்த பொருட்களை வெங்காயத் துண்டுகளால் தேய்த்தால் துரு நீங்கும்.

வெங்காயத்தை விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிறு சுத்தமாகும்.

நகச்சுற்று ஏற்பட்டால், சூடான சாதம், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து கட்டினால் ஆறிவிடும்.

ரோஜா பூ செடிகளுக்கு வெங்காயத் தோலை உரமாக போட்டால் பூக்கள் நிறையவும், அடர்த்தியாகவும் பூக்கும்.

தோல் பொருட்கள் மீது படியும் கரைகள் நீங்க வெங்காயம் சாறு தடவி பிறகு வெள்ளை வாசலைன் தடவி தேய்த்தால் கறை நீங்கிவிடும்.

பாத்திரங்களில் அடிப்பிடித்தால் சிறிது வெங்காயத்தை நறுக்கி போட்டு நீர் ஊற்றி கொதிக்க விட்டால் சரியாகிவிடும்.

சமையலறை ஜன்னல்களில் படியும் எண்ணெய்க் கறை பிசுக்குகள் போக வெங்காயத்தை நறுக்கி தேய்த்தால் போதும். பளிச்சென்று ஆகிவிடும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com