பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்

பாத எரிச்சல், குதிகால் வலி குறைவதற்கு...
பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்

ளிர் வேப்பிலை ஒரு கொத்து எடுத்து, அதில் மஞ்சள் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியிலோ அரைத்து இரவு தூங்கப் போகும் முன்  ஒரு பக்கெட்ட வெந்நீரில் கலந்து அதனுடன் கல் உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் இரண்டு கால்களையும் மூழ்கும்படி வைத்து ஒரு காலினால் ஒரு காலை தேய்த்துவிட வேண்டும். பின்னர் கால்களை மெல்லிய துணியால் நன்கு துடைத்து விட்டு இந்த வேப்பிலை கலவையில்  இரண்டு ஸ்பூன் தனியாக எடுத்து குதிகால், மற்றும் பாதத்தின் அடிப்பகுதி முழுவதும் வைத்து கையால் தேய்த்து விட வேண்டும். சிறிது காய்ந்ததும்,  காலையில் எழும்பி கால்களைத் தேய்த்து கழுவி விட, வலி குறைந்து  சுகமாக இருக்கும். 

பொடுகு  தொல்லை மறைய...

நான்கு வேப்பங்கொட்டைகளின் தோலை  அரைத்து, விழுதாக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர், தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து, தலையை வாரி தலை முழுவதும் வேப்ப விழுதை தடவி பேக் போடவும். 

ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் சீவினால் பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகுத் தொல்லையும் மறைந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com