பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்!

பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்!

சீலத் துணிப் புகை

ஜெயகாந்தி மகாதேவன்

ன் சிறு வயதில், எங்கள் கிராமத்தில், அநேகருக்குக் காலணி கிடையாது. வெளியே சுற்றும்போது, காலில் முள் மற்றும் கண்ணாடி துண்டு குத்துவது வழக்கம். அவற்றை மேலோட்டமா கையால் பிடுங்கி எடுத்தாலும், சிறு துண்டு உடைந்து, தோலுக்கடியில் தங்கி வலி கொடுக்கும். அப்போதெல்லாம் பாட்டி செய்யும் வைத்தியம் இதுதான்.

கர்ச்சீப்பை விட ரெண்டு மடங்கு பெரிய காட்டன் துணியை எடுக்கணும். அதை இரண்டா மடித்து, நடுவில் சிறிது நெருப்பு வைத்து மீண்டும் அதை மூன்று நான்கு மடிப்பு இறுக்கமா  மடித்திடணும். துணி பற்றி எரியக்கூடாது. புகை மட்டும் உள்ளிருந்து  வந்து கொண்டிருக்கணும். காலில் முள்/கண்ணாடி குத்திய இடத்தை அந்த புகைக்கு நேரா மிக அருகில் காட்டணும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை செய்தால், சூடான புகை பட்டு, ரெண்டு நாளில் அந்த இடம் மஞ்சள் நிறமாகி, பழுத்து, உள்ளே சீழ் (pus) வைக்க ஆரம்பிக்கும். அந்த நேரம், ஊசி வைத்து குத்தினால், சீழ்கூடச்  சேர்ந்து உள்ளிருந்த துண்டுப் பொருளும் ஈசியா வெளிவந்து விடும். பின் அந்த இடத்தில் மஞ்சள் வைத்து கட்டிவிட்டால், கால் தானா சரியாயிடும்.

இந்த வைத்தியத்திற்குப் பெயர் ‘சீலத் துணிப் புகை’ போடுதல். பெரும்பாலும் பழைய, கிழிந்துபோன  காட்டன் சேலையிலிருந்து கிழித்தெடுத்த துணியை ஊபயோகிப்பதால், வந்த பெயர் இது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com