பலனளிக்கும் பாட்டி வைத்தியம்!

பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்
பலனளிக்கும் பாட்டி வைத்தியம்!

புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட இருமல் குணமாகும் 

செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில்  5 மிளகு, 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அருந்தி வர, இதயப் படப்படப்பு, இதய வலி, இதய வால்வுகளில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

வேப்பம்பழத்தை சர்பத் செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். தோல் நோய்கள் குணமாகும்.

குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடித்தால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் கொழுப்பை குறையும்.

ம்மான் பச்சரிசி இலையின் பாலை முகப்பரு மீது தடவினால், முகப்பரு சரியாகும்.

சிறுநீர் உடலில் தேங்கினால், கை கால்களில் வீக்கம் உண்டாகும். கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால் சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேற்றும் .

முடக்கத்தான் கீரையை உப்பு மிளகு சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால், உடல் வலி, வாத நோய்கள் பறந்துவிடும்.

மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை சாப்பிட ஞாபக மறதி, உடல் சோர்வு, சளித் தொந்தரவுகள், நீங்கும்.

ண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால் மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், மூட்டுவலி நீங்கும்.

ற்பூரத்தையும், மிளகையும், தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை ஒரு துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தில்  ஒத்தடம் கொடுக்க சுளுக்கு சரியாகும்.

ஞ்சி சாறும், சின்ன வெங்காயச் சாறும், தலா ஒரு ஸ்பூன் கலந்து காலை வேளையில் குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் தேவையான அளவு இன்சுலின் சுரக்கும்.

ரு அரை ஸ்பூன் சீரகம் தினம்  சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சரியாகும்.

லக்காயை போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் உங்களது வாய் துர்நாற்றம், ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com