பூப்படைதல்போது போஷாக்கான உணவு!

பூப்படைதல்போது போஷாக்கான உணவு!

ப்போதெல்லாம் பெண்பிள்ளைகள் சின்ன வயதிலேயே பருவமடைந்து விடுகின்றனர். அப்பொழுது அவர்கள் உடலில் வலு குறைவாக இருக்கும். நாம்தான் அவர்களுக்குப் போஷாக்கான உணவுகளைச் செய்து தரவேண்டும். அது நம் கடமையும் கூட.   

உளுத்தம் பருப்பு சாதம்:

எங்கள் ஊர் பக்கத்தில் உளுத்தம் பருப்பு சாதம், பயறு குழம்பு, எள்துவையல், செய்து தருவார்கள். செம டேஸ்டாக இருக்கும்.

ஒரு ஆழாக்கு புழுங்கல் அரிசி, 50 கிராம் வெள்ளை உளுத்தம் பருப்பு ஒன்றாக கழுவி, தண்ணீர் வடித்து வைத்துக்கொள்ளவும். 4 காய்ந்த மிளகாய், 1 டீஸ்பூன் சீரகம், ¼ டீஸ்பூன் மஞ்சள் பொடியை நீர் விட்டு மிக்ஸியில் மைய அரைத்து, 10 சாம்பார் வெங்காயத்தைப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். பிரஷர் பேனை அடுப்பில் வைத்து சிறிதளவு  நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து பிரட்டி, அரிசி, பருப்பு, அரை மூடி தேங்காய்த் துருவல் போட்டு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து கிளறி ப்ரஷர்பேனை மூடி இரண்டு விசில் வந்தவுடன், ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து, இறக்கி நன்கு மசித்து வைக்கவும். இத்துடன் பயறு குழம்பு ஊற்றி தரலாம். சூப்பராக இருக்கும்.

மொச்சைப் பயறு குழம்பு:

ருப்பு மொச்சை (10 மணி நேரம் ஊற வைத்தது) நன்கு வேகவைத்துக் கொள்ளவும். அரை மூடி தேங்காய் துருவலை நன்கு விழுதாக அரைத்து அதனுடன் 10 சாம்பார் வெங்காயத்தைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும் எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்து, நன்கு கரைத்துக்கொள்ளவும்.  ப்ரஷர்பேனில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய கத்திரி, முருங்கை, தக்காளி சேர்த்து லேசாக வதக்கி, பின் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தேங்காய் விழுது போட்டு, நன்கு வதக்கி பிறகு புளிக்கரைசல் தேவையான உப்பு வேக வைத்த பயறை சேர்த்து நன்றாக கலக்கி ப்ரஷர்பேனை மூடி 2 அல்லது 3 விசில் வந்தபின் இறக்கி கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வாசமா பயறு குழம்பு ரெடியாகிவிடும்.

எள் துவையல்:

ருப்பு எள் ஒரு 50 கிராம் வாணலியில் நன்கு வறுத்து, முதலில் சிறிதளவு புளி ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு உப்பு, பூண்டுபல் 1, கருவேப்பிலை 1 ஆர்க்கு சேர்த்து நீர்விட்டு மைய அரைத்து, கடைசியாக எள்ளை சேர்த்து, கரகரப்பாக அரைத்து எடுக்க… பா(வா)சமான எள்துவையல் ரெடியாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com