உடல் நலம் காக்கும் பொட்டுக்கடலை!

உடல் நலம் காக்கும் பொட்டுக்கடலை!

பொட்டுக்கடலை, பொரிகடலை, உடைச்சகடலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இதில், உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான வைட்டமின் A, B1,B2,B3, C, D, E, K மற்றும் ஃபோலியேட், பேண்டோதெனிக் ஆசிட்கள், புரதம், நார்ச்சத்துக்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

இதை அடிக்கடி உண்டு வர நாம் பெறும் நன்மைகள் பல. இதிலுள்ள கரையும் நார்ச்சத்தானது கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடை கூடாமல் தடுப்பதுடன் இதயத்தையும் பாதுகாக்கும். மலச்சிக்கல் நீங்கும். ரத்த சர்க்கரை அளவு சமப்படும்.

அதிக அளவிலான பொட்டாசியமும், குறைந்த அளவு சோடியமும் ரத்த அழுத்தத்தை சீராக்கும். சில வகை புற்றுநோய் அபாயத்தையும் தடுக்கும். இரும்பு சத்து குறைபாடு நீங்கி ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

இவ்வாறு பற்பல நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள பொட்டுக்கடலையை மிக்ஸியிலிட்டு பவுடராக்கி ரவா லட்டுபோல் செய்து சாப்பிடலாம். முறுக்கு மாவிலும் கலந்து சுடலாம். தேங்காய் சட்னியில் சேர்த்து அரைக்கலாம்.

பொட்டுக்கடலை, சிறிது சீரகம், சிறிது மிளகாய் தூள், பொடிசா நறுக்கிய வெங்காயம், பிரட்டினாற்போல் வருமளவு நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாய் கலந்து வளரும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸா கொடுத்துவர உடல் வளம் பெருகுவது உறுதி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com