ரணகள்ளி மூலிகை இலை - எப்படிப் பயன்படுத்துவது

ரணகள்ளி மூலிகை இலை - எப்படிப் பயன்படுத்துவது

ரணகள்ளி இலை மனித உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்த தாவரமாக விளங்குகிறது. கண், காது, குடல், காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பலநோய்களையும் குணப்படுத்தக்கூடியது.

ரணகள்ளி இலை பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது. இந்த இலை அமிலத்தன்மையுடனும் உவர்ப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். ஆயுர்வேதத்தில் ரணகள்ளி இலையின் பங்கு என்ன, அதன் நன்மைகள் என்னென்ன என்ற குறிப்புகளை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் G.K.தாராஜெயஸ்ரீ BAMS.

மிகச்சிறிய தாவர வகையைச் சேர்ந்தது ரணகள்ளி. இதை அழகுக்காக பலர் வீடுகளில் வளர்க்கிறார்கள். வெப்பம் நிறைந்த பகுதியில் இவை காணப்படும். ரணகள்ளி பெரும்பாலும் அலங்கார தாவரமாக பயன்படுத்தப்பட்டாலும் இது முக்கிய மூலிகைகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

 இதன் இலைகளை நசுக்கி சாறெடுத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கண் வலி நீங்கும்.

இதன் சாறு மஞ்சள் காமாலை நோய்யை குணப்படுத்த.

 ரணகள்ளி இலைகளை நன்கு உலர வைத்து அதன்பின் தேநீர் தயாரித்து குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

 வயிற்றுப்போக்கிலிருந்து நிவாரணம் பெற இதன் இலைகளிலிருந்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் குணமாகும்.

காயங்கள் ஏற்பட்டால் சிறிது ரணகள்ளி இலைகளை எடுத்து மிதமான தீயில் சூடாக்கி   நசுக்கி காயத்தின் மீது வைத்து கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.

 ரணகள்ளி சாற்றை குடித்து வந்தால் காய்ச்சல் தணியும். இந்த இலைகளில் உள்ள ஆண்டிபிரைடிக் பண்பு காய்ச்சலின் அறிகுறிகளை போக்க உதவும்.

இது கல்லீரலின் செயல்பாட்டையும் அதிகரிக்கும்.

சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணப்படுத்த ரணகள்ளி சாறு குடித்து வர விரைவில் நோய் குணமாகும்..

காதுவலியில் இருந்து நிவாரணம் பெற ரணகள்ளி இலையை நசுக்கி அதன் சாறை காதில்  சில துளிகள் விட்டால் வலி நீங்கும்.

 நீரிழிவு

ரணகள்ளி இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் சாற்றை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் சர்க்கரை அளவு குறைவதை கவனிக்கலாம். 

நோய் எதிர்ப்பு சக்தி

ரணகள்ளி உலர்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 எடை கட்டுப்பாடு

இதன் சாறு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்திகரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வயிற்று வலி

ரணகள்ளி இலையில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை குடித்தால் வயிற்று வலி குறையும்.

குடல் புழுக்கள்

இந்த இலையில் உள்ள ஆண்டெல்மிண்டிக் பண்புகள் குடலில் உள்ள புழுக்களை அகற்ற உதகிறது. 

 இத்தகைய சிறப்புமிக்க ரணகள்ளி தாவரத்தை உங்கள் வீட்டிலும் வளர்க்க தொடங்குங்கள். 

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இந்த ரணகள்ளி இலையை  நோய் தீர்க்கும் மருந்தாக எடுக்கும் முன்   மருத்துவரின் ஆலோசனை பெற்று  எடுத்துகொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com