சிவப்பு முள்ளங்கி எனும் சிறந்த மருந்து!

சிவப்பு முள்ளங்கி எனும் சிறந்த மருந்து!

சிவப்பு முள்ளங்கியை சேர்த்துக் கொள்வதால் பார்வைக் கோளாறுகளை தவிர்க்க முடியும். லூடெயின் அதிகளவில் உள்ள இந்த காய்கறி, பார்வைக்கு பலமூட்டும் தன்மையை கொண்டுள்ளது.

சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மார்பக புற்று நோய், காலன் புற்று நோய் மற்றும் ரெக்டல் டியூமர்கள் வராமல் தடுக்க முடியும். சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன.

மூலநோய் இருப்பவர்கள் காலையும், மாலையும் 50 முதல் 100 மில்லி வரை முள்ளங்கியின் சாறை அருந்தினால் நோய் கட்டுப்படும்.

இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது.

சிவப்பு முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி தொற்றுநோயைக் குறைக்கிறது. மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

இதில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அவசியமான ஊட்டசத்து தாதுக்கள் ஆகியவை நிரம்பி உள்ளதால் எலும்புகளை எஃகு போல் உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன.

சிவப்பு முள்ளங்கியால் உங்கள் கரோனரி இரத்த நாளங்களைப் பாதுகாக்க முடியும் என்றும், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க முடியும் என்றும், ஜப்பானில் கண்டறிந்து உள்ளனர்.

தொடர்ந்து சிவப்பு முள்ளங்கி சூப் குடித்து வந்தால் நரம்பு சுருள்கள் நீங்கும்.

உங்கள் உணவில் சிவப்பு முள்ளங்கி சேர்த்து கொள்வதன் மூலம், உங்களின் சர்க்கரை அளவைக் நீங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சிவப்பு முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

முள்ளங்கி தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com