அவரை மற்றும் சேப்பங்கிழங்கில் ஆரோக்கியம் அளிக்கும் இவ்வளவு நன்மைகளா!

அவரை மற்றும் சேப்பங்கிழங்கில் ஆரோக்கியம் அளிக்கும் இவ்வளவு நன்மைகளா!
Published on

சேப்பங்கிழங்கு:

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் (Folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.

சேப்பங்கிழங்கில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் வலுவை சேர்க்கும்.

சேப்பங்கிழங்கில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும்.

பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக்கூடிய வல்லமை சேப்பங்கிழங்குக்கு உண்டு.

சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது

சேப்பங்கிழங்கு கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.

பெண்கள் கருவுற்ற காலத்தில் உடலுக்கு சத்துக்களை தரும் 'போலேட்' நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. சேப்பங்கிழங்கில் இந்த ஃபோலேட் சத்து அதிகம் உள்ளன.

சேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது. இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

சேப்பங்கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

அவரைக்காய்:

அவரைக்காய், உணவில் பொரியல், கூட்டு, சாம்பார் என்று பல விதங்களில் சுவை சேர்க்கிறது. அதன் மருத்துவ குணங்களையும் அறியலாமே..

அவரைக்காயில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, சர்க்கரை சத்து, புரதம், வைட்டமின் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் என்று ஏராளமான சத்துக்கள் உள்ளன.

பத்திய உணவு உண்பவர்கள் கூட இதை சாப்பிடலாம். எந்த பக்க விளைவும் ஏற்படாது.

இது இன்சுலின் உற்பத்தியை தூண்டி, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

இதில் அதிகம் உள்ள கால்சியம், வளரும் குழந்தைகளின் எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

இதிலுள்ள பாஸ்பரஸ், எலும்பு சம்பந்தமான நோய்களை தீர்க்கிறது.

பொட்டாசியம் சத்து, இதய பிரச்சினைகளை தீர்க்கிறது.

வைட்டமின் சி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

அவரைக்காய் ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.

இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கிறது.

அவரைக்காய் உணவு ஜீரணமாக உதவுவதுடன், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் தடுக்கிறது.

பசியின்மையை போக்கி பசியை தோண்டுகிறது.

உடல் பருமன் ஆனவர்கள் இதை சாப்பிட்டால் எடை குறையும்.

வயிற்றுப் புண்களை ஆற்றும்.

சர்க்கரை நோயால் வரும் மயக்கம், கை, கால் மரத்து போதல் இவற்றை சரி செய்கிறது.

இனி அவரைக்காயை தினமும் உணவில் சேர்ப்பீர்கள்தானே.‌‌..?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com