
இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும்.
பன்னீர் திராட்சையில் உள்ள டேரோஸ்டில்பேன் என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும். எனவே, கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து விடும்.
திராட்சையிலுள்ள அதிகளவிலான "ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்" உதவுகின்றன. இவை புற்று நோய்க்கு எதிராக போராடி நமது உடல் நலனை பாதுகாக்கின்றன.
திராட்சை பழத்திலுள்ள "லிவோலியிக் அமிலம்" அமிலம் நமது மயிர்கால்களை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து முடியை வலிமையாக்கும். இதனால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
ரத்தக் கொதிப்பு நோய்க்கு, அருமருந்தாக பயன்படுகிறது. ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சை பழவிதை குறைக்கிறது
கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது.
சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்ய பயன்படுகிறது.
மாலைக்கண் நோய் நீக்கி, கண்களில் ஒளியைத்தருகிறது.
பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகளிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது.
சொட்டு சொட்டாக நீர் பிரிதல், நீர் தாரை எரிச்சல் போன்றவை திராட்சைப் பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர சுரம், நாவறட்சி நீங்கும்.
திராட்சையை உண்பதால் ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
மேலும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும், ஆங்காங்கே ரத்தம் உறைவதை தடுப்பதிலும் திராட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும். ஆகவே,சுவாச பிரச்சனை இருப்பவர்கள், பச்சை திராட்சையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்லது.