நலம் காக்க, நகங்களைக் காப்போம்!

நலம் காக்க, நகங்களைக் காப்போம்!

விழிப்புணர்வு.

லிவ்  எண்ணைய்யை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும். 

சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடையும். சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும்படி வைத்தால் நாங்கள் உறுதியாகும். 

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து, அதனால் நகங்களைத் தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும். 

நகத்தை பற்களால் கடிக்கக் கூடாது. சமயங்களில் உங்களையும் அறியாமல் ஆழமாக கடித்து வைக்க, அதனால் நகங்களின் சீரான வளர்ச்சி பாதிக்கப்படும். 

சிலருக்கு நகங்கள் காய்ந்து வறண்டு காணப்படும். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில், அதில் எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விட வேண்டும். அதில் நகமும் கைகளும் நன்றாக மூழ்கும்படி சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது கைகளும், நகமும் வறட்சி அடைவதைத் தடுக்கும்.

கிளிசரினும்,எலுமிச்சைச் சாறும் கலந்து அதை பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும். பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவினாலும் நகங்கள் பளபளப்படையும். 

சமையல் வேலைகள், பாத்திரம் கழுவுவது, டீக்கடை வேலை போன்று  தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் கைகளை சரியாக உலரச் செய்யவில்லை எனில் நகங்களில் பூஞ்சை தொற்று ஏற்படும். இதை அப்படியே விட்டால் பாக்டீரியா தொற்றும் சேர்ந்து கொள்ளும். இதனால் இவர்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை. இவர்கள் சமைப்பதை சாப்பிடுபவர்களுக்கும் நோய்க்கிருமி தொற்று ஏற்படும். எப்போதும் தண்ணீரில் வேலை செய்பவர்கள், கைகளைக் கழுவி  சுத்தமான துணி கொண்டு ஈரத்தைத் துடைத்தால் பிரச்னை வராது. 

துணி துவைக்க தரமான லிக்விட் / சோப்புகளை பயன்படுத்துங்கள். வீட்டு வேலைகள் முடிந்ததும் கைகளை கழுவுங்கள். சிறிது நேரம் கழித்து மாய்ச்சரைசர் கிரீம் தடவுங்கள். இதனால் நகங்கள் உடையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு சத்துக் குறை பாடுகளே காரணம். நரகத்தின் வளர்ச்சிக்கு கரோட்டின் என்ற புரதச்சத்துதான் காரணம். உணவில் புரதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.  கால்சியம் ஏ, நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். பழம் காய் கறிகளை சாப்பிடுவது பளபளப்பு தரும். துத்தநாகம், வைட்டமின் பி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

ரு வகையில் நகமும் நம் நலம் காட்டும் கண்ணாடியே! உதாரணமாக, ஒருவருக்கு நகங்கள் மிகவும் வெள்ளை யாகவும் குழிவுடனும் இருந்தால் அவருக்கு இரத்த சோகை தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம். நாகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்பில் சிவப்புப் புள்ளிகள் தென்பட்டால் அவருக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். புரதச்சத்து குறைபாடு இருந்தாலும் பாதி நகம் முழுக்க வெண்மையாக இருக்கும். நகம் மஞ்சளாக, வெளிர் மஞ்சளாக காணப்பட்டாலும் அது மஞ்சள் காமாலையின் அறிகுறி  என்கின்றனர் மருத்துவர்கள். 

ஆதலால், இது போன்ற நோய்களை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டுமெனில் நகங்களில்  எப்பொழுதும் நெயில் பாலிஷுடன் இருப்பது சரியல்ல. நெயில் பாலிஷ் போடுவதால் நகங்கள் உணர்த்தும் உடல் பிரச்னைகளை உணர முடியாமல் போய்விடும். ஆதலால்  அடிக்கடி நெயில் பாலிஷ் போடுபவர்கள் இவற்றை கவனத்தில் கொண்டு, நகம் காத்து நலம் காக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com