
வீடென்று இருந்தால் அதில் கட்டாயம் இடம்பெற்றாக வேண்டிய பொருட்களின் பட்டியலென்று ஒன்று உண்டு. அந்தப் பட்டியலில் எப்போதுமே வேப்பெண்ணெய்க்கு பிரதான இடம் உண்டு. நம் பழந்தமிழந் பண்பாட்டில் வேம்பு இல்லாத வீடுகளைக் காண்பது அரிது. இன்றும் கூட தனிவீட்டைக் கட்டி வாழ விரும்புகிறவர்கள் வீட்டின் முன் புறத்தில் வேப்ப மரத்தை வளர்க்கும் ஆவல் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இதோ அருங்கோடை வரவிருக்கிறது. கோடையின் அரசனான வேம்பின் மகத்துவத்தை அறிந்து கொள்ள இதை விடப்பொருத்தமான காலம் வேறு உண்டோ?!
வேம்பை நாம் பலவிதங்களாகப் பயன்படுத்தி வந்தாலும் வீடுகளில் அதன் பொதுவான பயன்பாடு எண்ணெய் வடிவில் தான் இருக்கும்.
கைக்குழந்தைகள், வளரிளம் பருவத்துக் குழந்தைகள் முதல் பூப்பெய்திய சிறுமிகள், இளம்பெண்கள் வரை இந்த வேப்ப எண்ணெய் அல்லது நீம் ஆயிலின் பயன் மிக அதிகம்.
என்ன தான் வேம்பின் முக்கியத்துவம் குறித்து நமக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்த போதும் கூட அதை நேரடியாகப் பயன்படுத்தும் போது தான் நம் மனதில் பல்வேறு கேள்விகள் முகிழ்க்கத் தொடங்குகின்றன. பொதுவாக வேம்பு நல்லது என்று தெரியும் தான். ஆனால், அதை எந்தெந்த விஷயங்களுக்காக? எந்தெந்த நோய்களைத் தீர்ப்பதற்காக எப்படி எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து நமக்குப் பல கேள்விகள் உண்டு. அப்படியான கேள்விகளுக்கான விடைகளை இப்போது காண்போம்.
முதலின் வேம்பிப் மருத்துவப் பலன்களின் இருந்து தொடங்குவோம்.
வேம்பின் மருத்துவ பயன்கள் என்ன?
வேம்பின் இலை மற்றும் அதன் கூறுகள் இம்யூனோமாடுலேட்டரி, அழற்சி எதிர்ப்பு, இரத்தச் சர்க்கரைக் குறைவு, அல்சர், மலேரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற, ஆன்டிமுடேஜெனிக் மற்றும் ஆன்டிகார்சினோஜெனிக் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. எனவே வேம்பு சரும நோய்களைத் தீர்க்க உதவுவதோடு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் ஸ்திரமாக்க உதவுகிறது.
கண் கருவளையப் பிரச்சனையை நீம் ஆயில் தீர்க்குமா?
கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறைய வேப்ப இலைகள் சிறந்த வழிகாட்டுகின்றன. சில வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை ஆறவைத்து, இந்த தண்ணீரில் ஒரு பருத்தி உருண்டையை நனைத்து,
உங்கள் கண்களுக்குக் கீழே வைக்கவும். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைக் மறைய ஒரு வாரம் தொடர்ந்து இதைச் செய்யுங்கள்.
முகத்தில் நீம் ஆயில் தடவிக் கொண்டு தூங்கலாமா?
"முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்களை குணப்படுத்த வேம்பை நீர்த்த வடிவில் பயன்படுத்தப்படலாம். பருக்கள் மற்றும் அவற்றால் உண்டாகும் தழும்புகளுக்கு வேப்ப எண்ணெயை நேரடியாக அப்ளை செய்யாமல் முகத்தில் தடவிக்கொள்ள பருத்தித் துணியைப் பயன்படுத்துங்கள், இரவு தூங்கச் செல்லும் முன் முகத்தில் வேப்ப எண்ணெய் அப்ளை செய்து விட்டு ஒரு இரவு முழுதும் அப்படியே விட்டு விடுங்கள்,” அதற்கு நல்ல பலன் உண்டு என்று ஸ்கின் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நீம் ஆயிலின் எதிர்மறையான விளைவுகள் என்ன?
சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கூட நீம் சப்ளிமெண்ட்ஸைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதை அதிகமாகப் பயன்படுத்தினால் தளர்வான மலம், வாந்தி, அமிலத்தன்மை, கல்லீரல் பாதிப்பு, கருவுறுதல் குறைதல், என்செபலோபதி மற்றும் குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படலாம்.
நீம் ஆயில் மெலனின் அளவைக் குறைக்குமா?
சீரற்ற ஸ்கின் டோனை மாற்றி சருமம் முழுவதும் ஒரே சீரான ஸ்கின் டோனை நிலை நிறுத்த நீம் ஆயில் உதவுகிறது.நீம் ஆயிலின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காரணமாக, தோல் செல்களில் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.
உதட்டில் நீம் ஆயில் தடவலாமா?
ஒரே ஒரு துளி நீம் ஆயில் போதும், ஒரு துளி நீம் ஆயில் எடுத்து அதை நம் உதடுகளில் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை தடவினால், உதடு வீக்கம், சிவத்தல் மற்றும் அசௌகரியம் குறைவதைக் காணலாம். நீம் ஆயிலின் கசப்பு குமட்டலைத் தரும் என்ற அச்சம் இருந்தால் நீங்கள் நீம் ஆயிலுடன் சரி அளவில் கோகோனட் ஆயில் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து உதடுகளில் தடவலாம். எண்ணெய்களின் இந்த கலவையானது உங்கள் சருமத்தில் விரைவாக உறிஞ்சப்பட்டு விடும் அத்துடன் இதில் சிறிதளவு உட்கொண்டாலும் பெரிய அளவிலான பாதிப்பு எதுவுல் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
நீம் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும்?
நீம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், முகப்பரு, தடிப்புத் தோல் அழற்சி மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற மேல்தோல் நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செப்டிக் புண்கள், பாதிக்கப்பட்ட தீக்காயங்கள், ஸ்க்ரோஃபுலா, மந்தமான
புண்கள் மற்றும் ரிங்வோர்ம் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
நீம் சருமத்தை இறுக்கமாக்குமா?
வேம்பில் வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை சருமத்தை இறுக்கமாக்குகின்றன, இதனால் வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.
யார் நீம் பயன்படுத்த கூடாது?
நீங்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தால் நீம் பயன்படுத்த வேண்டாம். அறுவைசிகிச்சை: வேம்பு இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம். அறுவை சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னரும் இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாட்டில் இது தலையிடக்கூடும் என்ற கவலை உள்ளது. திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பு நீம் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
கடைசியாக ஒரு முக்கியமான விஷயம் வேப்ப எண்ணெய் அல்லது நீம் ஆயிலை இப்போதெல்லாம் சூப்பர் மார்கெட்டுகளில் 50 Ml பாட்டில்களில் அடைத்து விற்கிறார்கள். சிலருக்கு அதிலும் சந்தேகம் உண்டு. இதை வெறுமே சருமத்தில் மட்டும் தடவலாமா அல்லது வாய் வழியாக உட்கொள்ளலாமா? என்று அதற்கான பதில்... தவிர்த்து விடுங்கள் என்பதே/ கடைகளில் கிடைக்கக்கூடியவற்றில் என்னென்ன விதமான ஆயில்கள் கலக்கப்படுகின்றன என்று நமக்குத் தெரியாது. வாசனைக்காக அவர்கள் வேறு ஏதேனும் பொருட்களை அதில் கலந்திருந்து அவை நமக்கு அலர்ஜியானால் பிறகு சிக்கலில் முடியும். எனவே மொத்த வியாபார எண்ணெய்க் கடைகளில் கோல்டு பிரஸ்டு நீம் ஆயில் இருந்தால் அவர்களிடம் இதை வாய்வழியாக எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டு வாங்கிப் பயன்படுத்துங்கள். அதையும் கூட மருத்துவர்கள் எப்படிப் பரிந்துரைக்கிறார்களோ அந்த அளவுகளில் மட்டுமே உட்கொள்வது நல்லது. இல்லாவிட்டாலும் வீடுகளில் பாட்டிகளுக்கா பஞ்சம்ம்! அவர்களிடம் கேட்டும் நீம் ஆயிலை உட்கொள்ளலாம். பிழையேதும் இல்லை.