அச்சுறுத்தும் ஆரோக்கிய கேடுகள்!

அச்சுறுத்தும் ஆரோக்கிய கேடுகள்!

மது உடல்நலத்திற்கு  புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவைகளை ஆரோக்கியகேடு என்பர். ஆனால் வேறு சில ஆரோக்கிய கேடுகளும் உண்டு அவற்றின் மீது மிக கவனமாக  இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

ஒரே நாளில் அதிகப்படியான நேரம் உட்கார்ந்தே இருக்கின்றவர்களுக்கு பலவிதமான உடல் நலக்கோளாறுகள் பின்னாளில் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வில்  கண்டறிந்துள்ளனர். அதிகப்படியான நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடலின் பயோலாஐிக்கல் மெக்கானிசம் பாதிப்படைந்து உடல் பருமன், உடல் வலிகள் மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவைகள் ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

ஒரு நாளில்  அதிகமான நேரம் உட்கார்ந்தே இருப்பவர் களுக்கு நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற பல கேன்சர்கள் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். தொடர்ந்து உட்கார்ந்து வேலை பார்க்கும் போது இதயத்திற்கான ரத்த ஓட்டம் குறைகிறது, வளர்சிதை மாற்றப்பணிகள் குறைகிறது விளைவு இதயகோளாறுகள் ஏற்படுகிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட நோய் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் உட்காராதீர்கள்.

தொடர்ந்து ஒரே இடத்தில்  உட்காரும் சூழல் வந்தால் 30 நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் உங்களை ரிலாக்ஸ் செய்துவிட்டு பின் மீண்டும் அமர்ந்து வேலை செய்யுங்கள். ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் 2 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்தால் உடலில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. இதனால் பல விதமான உடல் நலப்பிரச்சனைகள் வருவது தவிர்க்கப்படுகிறது என்கிறார்கள் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

லக அளவில் காற்று மாசுபாடு பெரிய அளவில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவித்து மனிதனின் வாழ்நாளை குறைக்கிறது. மேலும் உலகில் 6க்கு ஒரு மரணம் சுற்றுசூழல் மாசு காரணமாக ஏற்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சிகரெட், மது, எய்ட்ஸ் மற்றும் காசநோய் போன்ற வேறு சில காரணங்களால் ஏற்படும் துர்மரணங்களை காட்டிலும் அதிகப்படிப் படியான மரணங்கள் மாசு காரணமாக ஏற்படுகிறதாம்.

இந்தியாவில் சராசரி வாழ்நாள் காற்று மாசு பாட்டினால் 1.5 வருடம் குறைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. 2.5 மைக்ரான்கள் அளவுள்ள சிறிய துகள்கள் நுரையீரல்களுக்குள் ஆழமுடன் சென்று சுவாச நோய்கள், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்களை உருவாக்குகின்றன. இந்த துகள்கள் தொழிற்சாலைகள், கார் மற்றும் கனரக வாகனங்கள் வெளியிடும் புகை, நெருப்பு, வேளாண்மை மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படுகின்றன.

காற்று மாசுகளிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான சமையல் முறைக்கு மாறுங்கள், வெளியேறும் புகையின் அருகில் இருப்பதை தவிருங்கள். குறைந்த புகை வெளியிடும்  வாகனங்களை பயன்படுத்துங்கள், முடியும்  போதெல்லாம் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள், இயற்கை சூழ்ந்த பசுமையான இடங்களில் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

வீட்டில்   தனிமையில்  இருப்பது மிகப்பெரிய ஆரோக்கிய கேடு என்கிறது பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆய்வு. வீட்டில் தனிமையில் வாடுவது ஓரு நாளைக்கு 15 சிகரெட்கள் பிடிப்பதற்கு சமம் என்கிறார்கள். தனிமையில் இருப்பவர்களுக்கு  பக்கவாதமும், இதயநோய்களும் வரும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என்கிறது ஆய்வு. புகைப்பிடித்தல் மற்றும் உடல் பருமனை விட தனிமை நம் வாழ்நாளை அதிகம் குறைக்கிறது, குறிப்பாக வயதானவர் களிடம் என்கிறது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு.

தனிமை மிகப்பெரிய நோய் கூடிய வரை உங்களை பிசியாக வைத்துக்கொள்ளுங்கள் வேலை, பொழுது போக்கு, அடுத்தவர்களுக்கான உதவி என பிடித்ததை செய்யுங்கள் தனிமையை வெல்வது உங்கள் கையில்தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com