வீட்டில் நறுமணம் வீச...

வீட்டில்  நறுமணம் வீச...

வீடு சுத்தமாகவும், நறுமணம் மிக்கதாகவும் இருந்தால் தான் தெய்வ கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். நம்மை சுத்தமாக வைத்துக் கொள்ள வாசனை பொருட்களை எல்லாம் உபயோகிக்க யோசிப்பதில்லை, நம்மை நறுமணத்துடன் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது, நம் வீட்டையும் எப்பொழுதும் நறுமணத்துடன் வைத்திருக்க வேண்டும். நாம் வீட்டை எப்போதும் துடைத்து சுத்தம் செய்தால் மட்டும் போதுமா, வீடு எப்போதும் வாசனையாக இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம்.

அதற்கு நீங்கள் தினமும் இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் உபயோகித்து வந்தால் போதும், உங்கள் வீடு நறுமணம் மிக்கதாகவும், தெய்வ கடாட்சம் நிறைந்ததாகவும் மாறிவிடும். அது வேறு ஒன்றும் இல்லை ஜவ்வாது தான். இது தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இதை வீட்டில் நறுமணத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பதற்கான பதிவுதான் இது.

முதலில் ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோடா உப்பு, கால் டீஸ்பூன் அளவுக்கு ஜவ்வாது, இதை இரண்டும் ஒன்றாக கலக்க பன்னீர் ஒரு டேபிள் ஸ்பூன், பன்னீர் இல்லாத பட்சத்தில் ஒரு எலுமிச்சை பழ சாறு சேர்த்துக் கொள்ளலாம். இந்த மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு சின்ன கண்ணாடி பாட்டிலில் போட்டு மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து இறுக்க கட்டிவிட்டு, உங்கள் அறையில் எங்காவது ஓரிடத்தில் வைத்து விடுங்கள் போதும். இதை வாரம் ஒரு முறை மாற்றினால் போதும். அந்த வாரம் வீடு முழுதும் மணம் வீசிக் கொண்டே இருக்கும்.

சாங்கம் பொடி. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இது தூபத்திற்காக அதிகம் பயன்படுத்துவார்கள், இந்த தசாங்கம் பொடி எடுத்து தனியாகவும் ஊதுபத்தி போல் பயன்படுத்தலாம். ஆனால் அதைவிட அதில் அதை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, அரை டீஸ்பூன் இந்த ஜவ்வாது இரண்டையும் கலந்து ஒரு மண் அகலில் போட்டு அதன் மேல் சாம்பிராணியை தூவி தூபம் போடுங்கள் இதன் நறுமணம் அத்தனை நன்றாக இருக்கும்.

ரு பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு 200 மில்லி அளவுக்கு பன்னீரும், ஒரு டீஸ்பூன் மஞ்சள், அரை டீஸ்பூன் ஜவ்வாது, ஒரு டீஸ்பூன் வசம்பு, அரை டீஸ்பூன் பச்சைக் கற்பூரம், ஒரு டீஸ்பூன் உப்பு இதை அனைத்தையும் கலந்து வீடு துடைக்கும் போது தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் துடைத்து விட்டாலும் வீட்டில் அப்படி ஒரு நறுமணம் வீசும். வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி கூட போய்விடும்.

நீங்கள் சாமி படம் துடைத்து, மஞ்சள் சந்தானம் எது வைத்தாலும், அதில் சிறிது ஜவ்வாது கலந்து வைத்து பாருங்கள். அதன் மணம் நாள் முழுவதும் வீசி கொண்டே இருக்கும். இதை சாமி படம் துடைக்கும் போதும் சிறிதளவு கலந்து கொள்ளலாம். இந்த ஜவ்வாது மணம் வீட்டில் வீசிக் கொண்டே இருந்தால் தெய்வ கடாச்சம் கிடைப்பதுடன் எதிர்மறை ஆற்றல் கூட நம்மை விட்டு அகன்று விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com