உலகளவில் சிறந்த CEOக்களால் நடைமுறைப்படுத்தப்படும் 10 சிறந்த நேர மேலாண்மை திறன்கள்!

Time management
Time managementhttps://www.cleanlink.com

ல்ல நேர மேலாண்மை திறன் இருக்கும் ஒருவரால் தனது தொழில், செயல்திறன், தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வாழ்க்கை என அனைத்தையும் மேம்படுத்தி வெற்றியாளராக மிளிர முடியும். உலகின் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள் கடைபிடிக்கும் 10 சிறந்த நேர மேலாண்மை திறன்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நேர மேலாண்மை குறைபாடு என்ன காரணம்?

10ல் 6 பேர் நேர மேலாண்மை திறன் இன்றி அவதிப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் இதை, ‘நேர வறுமை’ என்கிறார்கள். இதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நேரத்தை தேவையில்லாத விஷயங்களில் வீணடிப்பது, நேரத்தை எதிரி போல உணர்வது, நிகழ்காலத்தில் வாழாமல் எதிர்காலத்தில் வாழ்வது.

சிறந்த நேர மேலாண்மை திறன்கள் 10:

1. முன்கூட்டியே திட்டமிடுதல்: சி.இ.ஓக்கள் தாமதமாக உறங்கச் சென்றாலும் மறுநாள் காலையில் சீக்கிரம் எழுகிறார்கள். அவர்களுக்கு மறுநாளுக்கான திட்டமிடப்பட்ட அட்டவணை உள்ளது. அதனால் திறமையாக முடிவுகள் எடுக்க முடியும். அற்பமான, தேவையற்ற விஷயங்களில் அவர்கள் நேரத்தை வீணாக்குவதில்லை.

2. அவ்வப்போது சிறு ஓய்வு: கடினமாக உழைக்க வேண்டி இருந்தாலும் அவ்வப்போது ஒரு சிறு ஓய்வு அவசியம். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையாவது ஒரு பத்து நிமிடங்கள் எந்த இடையூறும் இன்றி சிறுதூக்கம் தூங்குவது மூளையையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்கிறார்கள் சி.இ.ஓக்கள்.

3. நீண்ட கால திட்டமிடுதல்: உலகில் பெரிய வெற்றியாளர்கள் குறுகிய காலத்திற்கு திட்டமிடுவதில்லை. அவர்களது நோக்கம் நீண்ட கால திட்டமிடுதல் மற்றும் நிலைத்த வெற்றி. அதற்கு ஒழுக்கமும் நம்பிக்கையும் தேவை. குறுகிய கால லாபம் கருதி அவர்கள் செயல்படுவதில்லை.

4. சமூக ஊடகத் தொடர்பு: சமூக ஊடகங்களில் இயங்கி அப்டேட்டாக வைத்துக் கொள்வது முக்கியம். வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதற்கு இது முக்கியம். உலகின் எல்லா மூலைகளிலும், தரையில் கூட ஒரு காது வைத்திருப்பது முக்கியம் என்கிறார்கள் சி.இ.ஓக்கள். சமீபத்திய செய்திகள், புதிய கருத்துக்கள் போன்றவற்றைக் கண்டறிவது சிறந்த வணிக முடிவுகளை எடுக்க உதவுகிறது.

5. நோ சொல்லுதல்: தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை வீணடிப்பதற்கு மிக கண்டிப்பாக நோ என்று சொல்கிறார்கள். அவர்களால் வாங்க முடியாத ஒரே விஷயம் நேரம் மட்டுமே.

6. ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்தல்: ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்தல் சிறப்பானது. அதிக அளவு பணிகளை மேற்கொள்ளும்போது அவற்றை சிறிய குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கு பயிற்சி அளித்து செய்ய வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அபூர்வமான புனர்ஜனனி அமைந்துள்ள காஞ்சி கைலாசநாதர் கோயில்!
Time management

7. முக்கியமானது, முக்கியம் இல்லாதது: எதை முதலில் செய்ய வேண்டும் என அவர்கள் தெளிவாக அறிந்திருக்கிறார்கள். முக்கியமான செயல்கள், அவசரமாக உடனே செய்ய வேண்டியவை, சற்றே பொறுத்து செய்ய வேண்டியவற்றை காலம் தாழ்த்தி செய்யலாம். சில பணிகளை செய்வதற்கு தற்போது அவகாசம் இல்லை தேவையும் இல்லை என்னும்போது அவற்றை செய்யாமல் விடலாம்.

8. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயம்: சில சி.இ.ஓ.க்கள் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு செயலுக்காக ஒதுக்குகிறார்கள். திங்கள்கிழமை நிர்வாகத்திற்கு, செவ்வாய்க்கிழமை தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு, புதன்கிழமை சந்தைப்படுத்துதல், வளர்ச்சி, தகவல் தொடர்பு, வியாழன் டெவலப்பர்களுக்கு, வெள்ளிக்கிழமை அனைத்து நிர்வாகம் மற்றும் கலாச்சாரத்தை பற்றியது.

9. பிரித்துக் கொள்தல்: பில்கேட்ஸ் தனது நேரத்தை நான்கு பயனுள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்வார். அவ்வாறு செய்யும்போது சுமையும் தெரியாது, நேரமும் சரியாக செலவிடப்படும் என்கிறார்.

10. மல்டி டாஸ்கிங் வேண்டாம்: ஒவ்வொரு செயலையும் முழு கவனம் மற்றும் தீவிரத் தன்மையோடு செய்ய வேண்டும். மல்டி டாஸ்கிங் வேண்டாம். ஒரு செயல் முடிந்த பின்பு அடுத்ததற்கு செல்லலாம் என்கிறார் ஓபரா வின்ஃபிரே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com