தினசரி வாழ்வில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 10 மோசடி அபாயங்கள்!

Fraud risks faced daily
Fraud risks faced daily
Published on

றிவியல் தொழில் நுட்பம் பெருகினாலும் அதனடிப்படையில் மோசடி செய்யும் ஏமாற்றுக்காரர்களும் பெருகிக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆன்லைன் மோசடிகளில் பெரும் பணத்தை இழந்து தற்கொலை வரை தூண்டப்பட்டவர்கள் அநேகம் பேர். இதில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களும் உண்டு. மோசடி செய்பவர்கள் எல்லா தரப்பினரையும் குறிவைக்கிறார்கள். எனினும், நடுத்தர வயது மற்றும் வயதான நபர்களே இதில் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். தினசரி வாழ்வில் நம்மை அச்சுறுத்தும் 10 வித மோசடிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. TRAI தொலைபேசி மோசடி: இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பெயரில் மோசடி செய்பவர்கள் TRAIலிருந்து வந்ததாகக் கூறி, உங்கள் மொபைல் எண் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது எனச் சொல்லி, சேவைகள் இடை நிறுத்தப்படும் என மிரட்டலாம். இது முற்றிலும் பொய்யானது. TRAI எப்போதும் சேவைகளை நிறுத்தாது. தொலைத்தொடர்பு நிறுவனங்களே அதைச் செய்கின்றன.

2. சுங்கத்தில் சிக்கிய பார்சல் மோசடி: கடத்தல் பொருட்களுடன் கூடிய பார்சல் நமது பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறி பிணையப் பணம் செலுத்துமாறு கோருகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல் வந்தால் உடனே அந்த அழைப்பைப் துண்டித்து அந்த எண் குறித்து புகாரளிக்க வேண்டும்.

3. டிஜிட்டல் கைது: போலி போலீஸ் அதிகாரிகள் டிஜிட்டல் கைது அல்லது ஆன்லைன் விசாரணைக்கு வருமாறு அச்சுறுத்தல். உண்மையில் காவல்துறை டிஜிட்டல் கைதுகளையோ அல்லது ஆன்லைன் விசாரனைகளையோ நடத்துவதில்லை என்பதில் தெளிவாக இருங்கள்.

4. குடும்ப உறுப்பினர் கைது: உறவினர் கைது செய்யப்படுவார்கள் என்று கூறி நமது பாச உணர்வைத் தூண்டி பணம் பறிக்க முயல்வார்கள். நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களுடன் சரிபார்த்து உண்மைத் தன்மையை அறிவது முக்கியம்.

5. விரைவான பணம் ஈட்டும் வர்த்தகம்: சமூக ஊடக விளம்பரங்கள் பங்கு முதலீடுகளில் அதிக வருமானத்தை உறுதியளிக்கின்றன எனக் கூறி அதைப் பார்த்து ஆதரவளியுங்கள் என்பதைப் போன்ற அழைப்புகள். அதிக வருமானம் தரும் திட்டங்கள் பெரும்பாலும் மோசடிகளாகத்தான் இருக்கும் வாய்ப்பு அதிகம்.

6. பெரிய வெகுமதிகளுக்கான எளிதான பணிகள்: எளிய பணிகள் என்று அதிக தொகையை வழங்கி நம்பிக்கை ஊட்டி பின்னர் முதலீட்டைக் கேட்பது. உண்மையில் எளிதான பணத் திட்ட மோசடிகளே.

7. உங்கள் பெயரில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு மோசடி: போலி நபர்கள் உங்கள் பெயரில் போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்கி பெரிய பரிவர்த்தனைகளை நீங்கள் அறியாமல் நிகழ்த்துவது. அவ்வப்போது உங்கள் வங்கியுடன் கிரெடிட் கார்டு குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கார்போகரிசி இருக்க சருமப் பிரச்னைகளைக் கண்டு பயமேன்?
Fraud risks faced daily

8. தவறான பணப் பரிமாற்றம்: மோசடி செய்பவர்கள் தவறான பணப் பரிவர்த்தனைகளைக் கூறி பணத்தைத் திரும்பக் கேட்கின்றனர். இப்படி கேட்கும் பட்சத்தில் உங்கள் வங்கியுடனான பரிவர்த்தனைகளைச் சரிபார்க்கவும்.

9. KYC (Know Your Customer) காலாவதியானது: மோசடி செய்பவர்கள் இணைப்புகள் வழியாக KYC புதுப்பிப்பு விபரங்களை கேட்கிறார்கள். பொதுவாக வங்கிகள் தனிப்பட்ட முறையில் KYC புதுப்பிப்புகளை தெரிவிப்பார்கள்.

10. தாராளமாக வரி திரும்பப் பெறுதல்: வரித்துறை அதிகாரிகளாக ஏமாற்றி வங்கி விவரங்களைக் கேட்டுக் கொண்டு மோசடி செய்கின்றனர். ஆனால், வரித் துறைகள் ஏற்கெனவே நமது வங்கி விவரங்களைக் கொண்டுள்ளன என்பதுடன் அவை நேரடியாக மட்டுமே குறிப்பிட்ட நபரை தொடர்பு கொள்கின்றன.

இதுபோன்ற மோசடிகளை எதிர்கொண்டால் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அல்லது சைபர் க்ரைம் எண்ணில் துணிவாக தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com