Cabinets that make the kitchen look beautiful
Kitchen shelf

சமையலறைக்கு புத்துயிர் கொடுத்து அழகாகக் காட்டும் 10 திறந்த வகை அலமாரிகள்!

Published on

வீட்டின் சமையலறையில் சுத்தமாகவும் ஒழுங்காகவும் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை வைக்க திறந்த அலமாரிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அந்த வகையில் மிகவும் அழகாக சமையலறையை காட்டக்கூடிய 10 திறந்த வகை அலமாரிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

மரத்தாலான மிதக்கும் அலமாரிகள்: சூடாகவும் இயற்கையாகவும் இருக்கும் ஜாடிகள், கோப்பைகள் மற்றும் மசாலா பொருட்களை சேமித்து வைக்க கவுண்டருக்கு மேலே ஏறிய எளிய மர அலமாரிகளை நிறுவலாம்.

கண்ணாடி அலமாரிகள்: சமையலறையை காற்றோட்டமாக உணர வைப்பதோடு, ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடி அலமாரிகளை கண்ணாடி பொருட்கள் அல்லது கொள்கலன் பயன்படுத்த நிறுவலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை ஸ்டேட்டஸில் வைப்பவரா நீங்கள்? உங்களுக்குக் காத்திருக்கும் பெரிய ஆபத்து!
Cabinets that make the kitchen look beautiful

கொக்கிகள் கொண்ட அலமாரிகள்: கவுண்டர் இடத்தை மிச்சப்படுத்தி  குவளைகள் அல்லது பாத்திரங்களை வைக்க அலமாரிகளின் கீழ் கொக்கிகளைச் சேர்க்கலாம்.

மூலை அலமாரிகள்: பாட்டில்கள் அல்லது ஜாடிகளை சேமிக்க மூலைகள் பயனுள்ளதாக மாறும் என்பதால் மூலைகளில் L வடிவ அலமாரிகளை நிறுவலாம்.

கூடைகள் கொண்ட அலமாரிகள்: தளர்வான பொருட்களை வைக்க கூடைகள் கொண்ட அலமாரிகள் பயன்படுகின்றன. சமையலறையை நேர்த்தியாக வைத்திருக்கவும் சிற்றுண்டி, நாப்கின்கள் அல்லது பாத்திரங்கள் வைக்க ஏற்றதாக உள்ளது.

உலோக அலமாரிகள்: நகர்ப்புற சமையலறைக்கும் நவீன தோற்றத்திற்கும் தட்டுகள் வைக்க சிறிய அலங்காரங்களுடன் கூடிய மெலிதான உலோக அலமாரிகளைப் பயன்படுத்துங்கள்.

LED லைட் அலமாரிகள்: சமையலறை பிரகாசமாகி பொருட்களை முன்னிலைப்படுத்தி ஸ்டைலாகவும் ஆடம்பரமாகவும் தெரிவதற்கு அலமாரிகளின் கீழ் LED விளக்குகளை சேர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
பணம் சம்பாதிக்கக் கற்றுத்தரும் நம் பிள்ளைகளுக்கு அவர்கள் மகிழ்ச்சியாக வாழக் கற்றுத் தருகிறோமா?
Cabinets that make the kitchen look beautiful

செங்குத்து அலமாரிகள்: எண்ணெய்கள், சாஸ்கள், பாட்டில்கள் மற்றும் ஜாடிகளுக்கு உயரமான செங்குத்து அலமாரிகளைப் பயன்படுத்துங்கள்.

அலங்கார அலமாரிகள்: சமையலறையை புத்துணர்வாகவும் தனித்து தெரிவதற்கும் அலங்காரத்துடன்கூடிய அலமாரிகளில் தினசரி பொருட்களுடன் செடிகள் வைக்கப் பயன்படுத்தலாம்.

இரண்டு அடுக்கு அலமாரிகள்: குறைவாகப் பயன்படுத்தும் பொருட்களை மேல் அலமாரி, அன்றாட அத்தியாவசிய பொருட்களுக்கு கீழ் அலமாரி என இரண்டு அடுக்குகளாக அலமாரிகளைப் பயன்படுத்தலாம்.

மேற்கூறிய 10 அலமாரி வகைகளும் மிகவும் உபயோகமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும் என்பதால் புதிதாக வீடு கட்டுபவர்களும் ஏற்கெனவே அலமாரிகள் வைத்திருப்பவர்களும் கூடுதலாக வைத்துப் பயன் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com