Snake Near home
Snake Near home

உங்கள் வீட்டருகே பாம்பு நடமாட்டம் இருப்பதற்கான 10 அறிகுறிகள்… ஜாக்கிரதை!

Published on

இந்தியாவில் பாம்பு நடமாட்டம் என்பது சில பகுதிகளில் சகஜமானது. குறிப்பாக கிராமப்புறங்கள், நீர்நிலைகளுக்கு அருகாமையில் உள்ள நகரப் பகுதிகளில், பாம்புகள் வீட்டிற்குள் அல்லது வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நுழைவது பொதுவானது. ஆனால் அவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சரியான முறையில் கையாளுவது முக்கியம். உங்கள் வீட்டைச் சுற்றி ஒரு பாம்பு நடமாடுகிறது என்பதற்கான சில முக்கிய அறிகுறிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வீட்டருகே பாம்பு இருப்பதற்கான 10 அறிகுறிகள்:

  1. பாம்புத்தோல்: உங்கள் வீட்டுத் தோட்டம், பழைய பொருள்கள் அடுக்கி வைத்துள்ள இடம், அல்லது மரத்தடிகள் போன்ற இடங்களில் பாம்பின் உரிக்கப்பட்ட தோல் இருந்தால், அது பாம்பு நடமாட்டத்தின் மிகத் தெளிவான அறிகுறி.

  2. சுவடுகள்: மண் தரையிலோ, தூசி படிந்த இடத்திலோ பாம்பு நகர்ந்து சென்றதற்கான S வடிவ அல்லது அலை அலையான சுவடுகள் இருக்கும்.

  3. குட்டி பாம்புகள்: வீட்டின் மறைவான பகுதிகளில், குறிப்பாக குப்பைகள், செடிகள் நிறைந்த இடங்களில் பாம்பின் முட்டைகள் அல்லது சிறு குஞ்சுப் பாம்புகளைக் கண்டால், அங்கு ஒரு பாம்பு வசிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

  4. விசித்திரமான துர்நாற்றம்: சில பாம்புகளுக்கு ஒரு தனித்துவமான, மோசமான மணம் இருக்கும். இந்த வாசனையை நீங்கள் உணர்ந்தால், அது பாம்பு அருகில் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

  5. எலிகள், தவளைகள் குறைவது: உங்கள் பகுதியில் எலிகள், தவளைகள், அல்லது பறவைகளின் எண்ணிக்கை திடீரெனக் குறைந்தால், அங்கு ஒரு பாம்பு இரை தேடி வந்திருக்கலாம்.

  6. பறவைகள், விலங்குகள் சத்தம்: பாம்புகளைக் கண்டால், நாய்கள் குரைக்கும், பறவைகள் சத்தமிடும் அல்லது குரங்குகள் பதற்றமாக ஒலி எழுப்பும். இந்த அசாதாரண சத்தங்களைக் கவனியுங்கள்.

  7. பாம்பு புற்றுகள்: பழைய சுவர்கள், மரப்பொந்துகள், கற்களுக்கு அடியில் சிறிய துளைகள் இருந்தால், அது பாம்பின் இருப்பிடமாக இருக்கலாம்.

  8. திடீரெனத் தோன்றும் பாம்பு: இது வெளிப்படையான அறிகுறிதான். உங்கள் தோட்டத்தில், வீட்டு வாசல் படியில், சுவர் ஓரத்தில் திடீரெனப் பாம்பைப் பார்ப்பது.

  9. கூரையில் சத்தம்: இரவு நேரங்களில் கூரையிலோ, அறைகளிலோ ஏதேனும் நெளிவு சத்தம் கேட்டால், பாம்பு உட்புகுந்திருக்கலாம்.

  10. வீட்டுச் செடிகள், புற்களுக்கு அடியில்: பாம்புகள் மறைந்து வாழக்கூடிய இடங்களில் அதிகம் இருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள உயரமான புற்கள், அடர்த்தியான செடிகள், கற்களின் குவியல்கள் போன்றவை பாம்புகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடமாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கட்டுவிரியன் பாம்பு குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!
Snake Near home

உங்கள் வீட்டருகே பாம்புகள் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தாலோ, அல்லது பாம்புகளைப் பார்த்தாலோ பீதியடையாமல், அவற்றை முறையாகக் கையாள கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் நேரடியாக அவற்றை தாக்கவோ, விரட்டவோ முயற்சிக்க வேண்டாம். தகுந்த பாம்பு பிடிக்கும் வல்லுநர் அல்லது தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்து, உங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com