குடும்பம் குதூகலமாக விளங்க கடைபிடிக்க வேண்டிய 10 ஆலோசனைகள்!

10 tips to keep your family happy
10 tips to keep your family happy
Published on

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஒரு நிகழ்வாகும். அதில் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி பொறுப்பு அதிகரிக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இல்லறம் நல்லறமாக அமைய கடைபிடிக்க வேண்டிய 10 முக்கியமான ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத் தலைவன், குடும்பத் தலைவி என்ற பொறுப்பு கூடுவதால் குடும்பத்தில் உள்ள அனைவரின் சுக, துக்கங்களும் உங்களுடையது என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு பொறுப்பை உணருங்கள்.

2. ஒரு நல்ல தொழிலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டிய பிறகுதான் குடும்பத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.

3. சம்பாதிக்கும் வருமானத்தில் பாதியை குடும்ப செலவுக்கு செலவிட்டு மீதி பாதியை எதிர்கால தேவைகளுக்காகவும் எதிர்பாராத செலவுகளுக்காகவும் சேமிப்பது மிக மிக அவசியம்.

4. திட்டம் போட்டு செலவு செய்ய வேண்டும். அப்போதுதான் செலவுகள் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சிக்கனமே செழிப்புக்கான வழி.

5. உணவு விடுதிகளில் சாப்பிட்டு வீண்செலவு செய்வது சுகாதார கேட்டை விளைவிக்கும். மேலும், ஆடம்பரத்திற்கும் ஆசைப்படக் கூடாது.

6. எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும். நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் விவாதிக்கவும் வேண்டும்.

7. பிரச்னைகளை வளர விடாமல் அந்தப் பிரச்னைகளுக்கு அவ்வப்போது தீர்வு கண்டு பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பாதாம் பருப்பை எப்படி உட்கொண்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
10 tips to keep your family happy

8. குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுப்பது இன்றியமையாத கடமைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும்.

9. ஆணானாலும், பெண்ணானாலும் காலாகாலத்தில் அவர்களுக்குத் திருமணத்தை செய்து வைப்பது பெற்றோர்களின் கடமை என்பதை எப்போதும் மறக்கக் கூடாது.

10. நம்முடைய கடைசி காலத்தை சிரமம் இல்லாமல் கழிக்க போதுமான ஆதாரத்தை இளம் வயதிலேயே தேடிக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட 10 ஆலோசனைகளை ஒருவர் பின்பற்றினாலே குடும்பம் குதூகலமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com