பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் நலன் காக்கும் 10 குறிப்புகள்!

Childrens going to school
Childrens going to school

ம்மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கல்வி பயிலும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், பெற்றோர்களாகிய நாம் பிள்ளைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் கல்வி முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டியது கடமையாகிறது. அதற்கு செய்யவேண்டிய 10 விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. கட்டுப்பாடுகளைக் கடைபிடியுங்கள்: அரசு மற்றும் சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றோர் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். பள்ளிகள் திறப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் தொடர்பான அறிவிப்புகள் குறித்து அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அரசு இணையதளங்கள், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் மற்றும் பள்ளியின் தகவல் தொடர்பு சேனல்கள் உள்ளிட்டவற்றை பார்த்து அறிந்துகொள்ள வேண்டும்.

2. பாதுகாப்பு நடவடிக்கை: பள்ளியில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறை குறித்து உங்கள் குழந்தையிடம் எடுத்துக்கூறுங்கள். தனிப்பட்ட பொருட்கள் பரிமாற்றத்தைத் தவிர்த்தல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறுங்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தையும் மற்றவர்களின் நல்வாழ்வையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்பதை அவர்களிடம் வலியுறுத்துங்கள்.

3. மனநலனை ஊக்குவியுங்கள்: விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்வது என்பது குழந்தைகளுக்கு கவலை அளிக்கும் விஷயமாகும். எனவே, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுங்கள். அவர்களுடன் பேசி அவர்களின் எண்ணங்களை அறிந்து. அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துங்கள். தேவைப்படும்பட்சத்தில் பள்ளி ஆலோசகர்களிடமிருந்து தொழில்முறை உதவி அல்லது வழிகாட்டுதலைப் பெறலாம்.

4. சத்தான உணவுகளைக் கொடுங்கள்: ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தயாரித்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள். அவர்களின் உணவில் பலவகையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களை சேர்த்துக் கொடுங்கள். சத்தான உணவு என்பது அவர்களின் செரிமானம், ஆற்றல் நிலை என ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது. மேலும், அவர்கள் படிப்பில் சிறப்பாக விளங்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகவும் அது இருக்கிறது.

5. நிம்மதியான தூக்கம்: குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு போதுமான தூக்கம் அவசியம் ஆகும். உங்கள் குழந்தைகள் அவர்களின் வயதுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட நேரம் தூங்குவதை வழக்கப்படுத்துங்கள். சிறப்பான தூக்கத்திற்கு வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். படுக்கை அறையில் குறைந்த வெளிச்சம் கொண்ட பல்புகளை எரிய விடுதல் நல்லது. கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆண்களின் எலும்புகள் வலிமையாக சில டிப்ஸ்!
Childrens going to school

6. உடற்பயிற்சியை ஊக்குவியுங்கள்: வழக்கமான உடற்பயிற்சி குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் குழந்தைகளை வயதுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள், விளையாட்டுகளில் ஈடுபட அவர்களை ஊக்கப்படுத்துங்கள். உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவை அவர்களின் நல்ல மனநிலையை அதிகரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

7. கல்வி சார்ந்த கவலைகளைப் போக்குங்கள்: உங்கள் குழந்தை கல்வியில் பின்தங்கியிருந்தால், அவர்களின் கற்றல் இடைவெளிகளைப் போக்க தேவையான நடவடிக்கையை எடுங்கள். அவர்களின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவதோடு, பல்வேறு கூடுதல் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் கல்வித் தளங்களை அணுகி அதற்குத் தகுந்த பயிற்சிகளை உங்கள் குழந்தைகளுக்கு அளித்திடுங்கள்.

8. போக்குவரத்துக்குத் தயார்படுத்துங்கள்: உங்கள் குழந்தை பள்ளி போக்குவரத்தைப் பயன்படுத்தினால், பள்ளி அல்லது போக்குவரத்து சேவை வழங்குனரால் செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். குழந்தைகள் தனியார் போக்குவரத்தில் செல்லும்பட்சத்தில் அவர்களை பள்ளிக்குக் கொண்டு சென்று விடுதல் மற்றும் வீட்டிற்கு திரும்ப அழைத்து வருதல் குறித்து முறையாக திட்டமிட்டு கேட்டுவைத்துக் கொள்ளுங்கள்.

9. தடுப்பூசிகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளுக்கான தடுப்பூசி செயல்முறை குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் உங்கள் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

10. பெற்றோர் உடல் நலனில் அக்கறை: குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்புவதற்கு இடையே உங்களின் உடல் நலனிலும் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம் ஆகும். உங்களின் பணிக்கு இடையே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடுங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களி டம் கலந்துரையாடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு நீங்களே புத்துணர்ச்சி ஏற்படுத்திக் கொள்வதோடு உங்கள் குழந்தைகளையும் சிறப்பாக கவனிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com