டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள 10 வழிகள்!

டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள 10 வழிகள்!

திகக் காய்ச்சல், குளிர், கை கால் மூட்டுகளில் வலி, தலைவலி, உடல் வலி, குமட்டல் ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகள். பெரும்பாலும், பகலில் கடிக்கும் கொசுக்களால்தான் டெங்கு பரவுகிறது. டெங்கு காய்ச்சலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்:

1. பிளாஸ்டிக் பைகள், பழைய டயர், காலி பாட்டில்கள், பூந்தொட்டிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

2. கொசு மருந்தை வீட்டைச் சுற்றி அடிக்கலாம். குறிப்பாக, செடிகள் அதிகம் வைத்திருப்போர் கொசு மருந்து தெளிப்பது அவசியம். இது கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்கும்.

3. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

4. வீட்டைச் சுற்றி புதர் போல் செடி கொடிகள் மண்டிக் கிடக்காமல் அழகாக வெட்டி பராமரிக்கவும்.

5. டெங்கு கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் அதிகம் முட்டையிட்டு வளரும். எனவே, வீட்டைச் சுற்றியும், மொட்டை மாடியிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அவற்றை நீக்கி தண்ணீர் சரியாக வடிய ஏற்பாடு செய்யலாம்.

6. வீட்டுக்கு அருகில் சாக்கடை இருந்தால் அதில் சிறிது மண்ணெண்ணெய் ஊற்றி விட, கொசுக்களின் உற்பத்தி குறையும்.

7. மாலை வேளைகளில் ஜன்னல்கள் மற்றும் வீட்டு கதவுகளை மூடி வைக்கவும்.

8. வீட்டின் அறைகளில் வேப்பெண்ணெய் கொண்டு விளக்கேற்றி வைக்க, கொசுக்களின் தொல்லை குறையும். கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம்.

9. வேப்பிலை, துளசி இரண்டையும் காய வைத்து தணலில் தூபம் போட, கொசுக்களின் தொல்லை குறையும்.

10. ஜுரம் வந்தால் உடனடியாக டாக்டரை பார்த்து விடுவது நல்லது. அத்துடன் காய்ச்சல் வந்தவர்கள் மற்றவர்களிடம் இருந்து சிறிது ஒதுங்கி இருப்பது மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க உதவும்.

இனி, ஜுரம் மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் தரும் ஒரு கசாயம் குறித்துக் காண்போம்.

தனியா - கால் கப், மிளகு - ஒரு ஸ்பூன், சுக்கு - ஒரு துண்டு தோல் நீக்கியது, திப்பிலி – 4, கண்டந்திப்பிலி - 2 துண்டுகள் இவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்து இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு பாதியாக வற்றியதும் காலை, மாலை என இரண்டு வேளைகள் குடிக்க, இரண்டே நாட்களில் ஜுரம் மற்றும் உடல் வலி போய்விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com