புதிதாகப் பள்ளி செல்லும் பிள்ளைகளைத் தயார்படுத்த பிடியுங்க 12 டிப்ஸ் !

Children
Children

பள்ளி செல்லும் பிள்ளைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

  • புதிதாகப் பள்ளி செல்லும் பிள்ளைகள்.

  • உயர்நிலைப் பள்ளி செல்பவர்கள்.

  • மேல்நிலைப் பள்ளி செல்பவர்கள்.

புதிதாகப் பள்ளி செல்லும் குழந்தைகளைத் தயார்படுத்துவதுதான் பெற்றோர்களுக்கு மிகவும் சவாலான விஷயம். வீட்டிலேயே வலம் வந்துகொண்டிருக்கும்

குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல எப்படிப் பழக்குவது?

  1. பள்ளியில் அட்மிஷன் கிடைத்தவுடன் அந்த பள்ளியைப் பற்றிய பாசிடிவ் விஷயங்களைக் குழந்தைகளுக்குச் சொல்வது நல்லது. அங்கு சென்றால் புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்றும், குழந்தைகளிடம் அன்பாக இருப்பார்கள் என்றும், புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லலாம்.

  2. பள்ளி திறப்பதற்கு முன்பாகவே குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் ஒருசில மாற்றங்களைக் கொண்டுவருவது நல்லது.

  3. சீரான உறக்கம்: குறைந்தது பத்து மணி நேரமாவது இரவில் உறங்கச் செய்வது அவசியம்.

  4. காலையில் கொஞ்சம் முன்பாகவே எழுந்து பல் தேய்ப்பது, குளிப்பது, சாப்பிடுவது என்று அன்றாட கடமைகளைச் செய்யப் பழக்கவேண்டும். 

  5. சிறு குழந்தைகளுக்கு டாய்லெட் ஹாபிட் எனப்படும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக் கடன்களைக் கழிக்கும் முறையைப் பழக்கப்படுத்துவது மிகவும் அவசியம். பள்ளிக்குப் போவதற்கு முன்பாகவே வீட்டிலேயே காலைக் கடன்களை முடித்து விட்டுச் செல்லும்படி பழக்கப்படுத்திவிடுவது நல்லது.

  6. குழந்தைகளின் உணவுப் பழக்கம் சீராக இருப்பது நன்று. சமச்சீரான உணவு அளித்தல் அவசியம்.

  7. காலை வேளைகளில் பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுவது நமக்கும் அவர்களுக்கும் அன்றைய நாள் இனிதாக அமைய உதவும்.

  8. புதிய சீருடைகள் மற்றும் ஷூக்கள் போன்றவற்றை பள்ளி திறப்பதற்கு முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதனைக் கடைசி நிமிடம் வரை தள்ளிப்போடுவது கூடாது.

  9. புத்தகம் மற்றும் நோட்டுகளுக்கு முன்னதாகவே அட்டை போட்டுத் தயாராக வைத்திருந்தால், ஆசிரியர்கள் எடுத்து வரச் சொல்லும்போது பதற்றப்படாமல் எடுத்துச்செல்ல முடியும்.

  10. குழந்தைகளிடம் அவர்களது அசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பற்றி மிகவும் பாசிடிவாகச் சொல்லி வைப்பது நன்று.

  11. மனதளவில் பிள்ளைகளைத் தயார் செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் விளையாட்டு முறையிலான கல்வியை (playway method) அவர்கள் மனத்தில் பதியவைத்தால் பள்ளி செல்வது சுகமான அனுபவமாக மாறிவிடும்.

  12. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்பட்டால் மிகவும் பிரமிக்கத்தக்க ரிசல்ட் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com