RS.12,000 புடவை RS.35,000 பிளவுஸ் ... வைரலான பெருமாள் உருவ ஆரி ஒர்க் வேலைப்பாடுகள் !

RS.12,000  புடவை  RS.35,000  பிளவுஸ் ... வைரலான பெருமாள் உருவ ஆரி  ஒர்க் வேலைப்பாடுகள் !
Published on

இன்றைய இளம் பெண்கள் புடவை மீது புதிதாய் மோகம் கொண்டுள்ளனர். இதனை அறிந்த பேஷன் டிசைனர்கள் பெண்களின் ஆசைக்கு ஏற்ப பலவித டிசைனர் சேலைகளையும் , அதற்கேற்றாற் போல விதவிதமான நுட்பமான வேலைப்பாடுகள் மிகுந்த பிளவுஸ்களையும் களம் இறக்கியுள்ளனர் ஆடை வடிவமைப்பாளர்கள்.

பட்டு சேலை மட்டுமல்லாது, விலை அதிகமான டிசைனர் சேலைகள் மற்றும் லட்சக்கணக்கில் தைத்து போட கூடிய ஆரி ஒர்க் நிறைத்த பிளவுசுகளும் இளம் பெண்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் வந்துள்ளன. எதிலும் புதுமையை விரும்பும் இந்தக் காலத்துப்பெண்கள், சேலை கட்டும் விஷயத்திலும் அதைப் பின்பற்றுகிறார்கள். பாட்டிகளும், அம்மாக்களும் கட்டியது போல இல்லாமல் பாரம்பரிய ஸ்டைலை தவிர்த்து, விதம்விதமாக சேலை, வண்ணமயமான ஜாக்கெட்கள் உடுத்துவதையே இன்றைய பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோவில்கள், திருமணங்கள் பார்ட்டி, ரிசப்சன் போன்ற விழாக்களுக்கு செல்ல என்ன மாதிரி புடவை உடுத்தலாம் அதற்க்கு எந்த மாதிரியான ஜாக்கெட்களை அணியலாம் என்று யோசித்து நவீன மங்கைகளாக வலம் வருகின்றனர்.

புடவைக்கு ஏற்ப மேட்ச்சிங் பிளவுசுக்கும் நிறைய செலவு செய்து, அழகழகாகதைத்துப் போடுவது இப்பொழுது நவீன பேஷனாகி வருகிறது. இப்படி பல ஆயிரம் செலவுபண்ணி வாங்கற புடவையை, சாதாரண ஸ்டைல்ல கட்டினா, புடவையோட அழகு மறைஞ்சிடும். பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணின ஜாக்கெட்டோட அழகும் தெரியாது. இதைத் தவிர்க்க, இப்பல்லாம் ரிசப்ஷன், பார்ட்டி மாதிரி நிகழ்ச்சிகளில் வித்தியாசமான முறைல சேலை கட்டலாம் ஜாக்கெட் அணியலாம் என யோசித்து வருகின்றனர்.

தற்போதைய பெண்கள் மத்தியில் ஆரி வேலைப்பாடுகள் என்பது பிரபலமடைந்து வருகிறது.தங்களது புடவை ப்ளவுஸ்களில் ஆரி வர்க் செய்வதை அதிகமான பெண்கள் விரும்புகின்றனர். ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் ப்ளவுஸ்களுக்கு கூட ஆரி வர்க் செய்யப்படுகிறது.

பெங்களூருவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது புடவை ப்ளவுஸில் திருப்பதி ஏழுமலையான் உருவத்தை பொறித்துள்ளார். இவர் அணிந்துள்ள புடவையை ரூ.12 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். ஆனால் ஏழுமலையான் உருவம் பொறித்த ப்ளவுஸ் தயாரிப்பதற்கு ரூ.35 ஆயிரம் செலவளித்துள்ளார். இந்த கலை நுட்ப வேலைப் பாடுகள் நிறைந்த ஏழுமலையான் உருவம் பொறித்த ப்ளவுஸ் அணிந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com