RCB அணியிடமிருந்து கற்க வேண்டிய 3 வாழ்க்கை பாடங்கள்!

Virat Kohli
Life Lesson From RCB TeamImage Credits: IndiaToday

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) கிரிக்கெட் அணி ஐபிஎல் போட்டியில் பல வருடங்களாக பங்கேற்று விளையாடியும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி இருந்தது.

நடப்பு 2024ல் நடந்த ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியுடன் ஆர்சிபி அணி போட்டி போட வேண்டியிருந்தது. இந்தப் போட்டியில் கடைசி நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி பலம் பொருந்திய சிஎஸ்கே அணியை தோற்கடித்து கடைசி செமி ஃபைனலிஸ்ட் இடத்தை கைப்பற்றியது பெங்களூரு அணி. இருப்பினும், அதிக ரசிகர்களைக் கொண்ட சிஎஸ்கே அணியை வெற்றியின் மிதப்பில் அமைதியாக இருக்கும்படி சொல்லி, கோலி செய்கை செய்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் RCB அணியை பதிலுக்குக் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையில் நேற்று இரவு நடைபெற்ற குவாலிஃபயர்1 போட்டியில் RCB அணி ராஜஸ்தான் அணியிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கோலியை இன்னும் அதிகமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

RCB அணியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம்:

1. நம்முடைய வாழ்க்கையில் எந்த நம்பிக்கையுமே இல்லாத போதும், அடிமட்டத்தில் இருந்தாலுமே கூட நம்மால் முன்னேறி மேலே வர முடியும். நமக்கு ஜெயிப்பதற்கு வெறும் 1 சதவீதமே வாய்ப்பு இருந்தாலுமே அதை சிறப்பாக பயன்படுத்தினால் 100 சதவீத முழு வெற்றியை பெற முடியும். அதனால் நம்பிக்கையை மட்டும் கடைசி வரை கைவிடவே கூடாது என்பது போன்ற விஷயங்களை ஆர்சிபி அணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. வெற்றி பெறுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்ட கொண்டாட்டம் தேவையில்லாதது. எந்த நிமிடத்திலும் எதுவும் மாறலாம். எதுவுமே நிலையானதல்ல என்பதை மனதில் வைத்து கொள்வது நல்லது. பெரும்பாலன நேரத்தில் அமைதி காப்பதே சிறந்தது. வெற்றி பெற்றுவிட்டோம் என்ற கொண்டாட்டமும் தேவையற்றது, தோல்வியடைந்து விட்டோம் என்று வருத்தப்படவும் தேவையில்லை. நம்முடைய உணர்ச்சிகளை தேவையில்லாத இடங்களில் வெளிக்காட்டுவது சங்கடத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
தென்கொரிய பெண்கள் பயன்படுத்தும் 5 அழகுசாதனக் கருவிகள் (beauty tools) என்னென்ன தெரியுமா?
Virat Kohli

3. நாம் அறியாமல் செய்யும் ஒரு செயல்கூட நண்பர்களைக் கூட நமக்கு எதிரிகளாக மாற்றிவிடும். கோலி, சிஎஸ்கே ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி சைகையால் கூறியது பலரையும் கோபப்படுத்தியது. ஏனெனில், உண்மையிலேயே RCB அணி வெற்றி பெற்றதில் சிஎஸ்கே ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியே! ஆனால், கோலியின் அந்த ஒரு செயலே அவரை ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக்கி விட்டது.

சில சமயம் வாழ்க்கைப் பாடத்தை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நாம் செய்த தவறை திருத்திக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் நல்லது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com