கொரிய மக்களின் 5 ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

 5 Fitness secrets of Koreans.
5 Fitness secrets of Koreans.

உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிகளிலும் அங்கு வாழும் மக்களின் மாறுபட்ட உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்களினால் உடல் ஆரோக்கியம் மாறுபட்டதாக இருக்கும். ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் ஃபிட்டாக இருப்பார்கள். குறிப்பாக கொரிய மக்கள் அனைவருமே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் பிட்னஸ் ரகசியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் உடல்பருமனால் அவதிப்படும் நபராக இருந்தால், இந்த பதிவில் நான் சொல்லப்போகும் கொரிய மக்களின் பிட்னஸ் ரகசியங்களைத் தெரிந்து கொண்டு அதை நீங்களும் முயற்சித்து நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் கொரிய மக்களின் உணவு பழக்கங்கள் உடலை பிட்டாக வைத்திருப்பதற்கு பெரிதும் உதவுகிறது. 

கொரிய மக்கள் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம்:

  1. நொதித்த உணவுகள்- கொரிய மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் கிமிச்சி என்ற நொதிக்க வைக்கப்பட்ட காய்கறி உணவு இருக்கிறது. இதில் பெரும்பாலும் வெங்காயம், முட்டைக்கோஸ், முள்ளங்கி போன்றவை பயன்படுத்தப்பட்டு, அதில் பூண்டு, மிளகாய், சர்க்கரை, உப்பு, மிளகு போன்றவை சேர்க்கப்பட்டு நொதிக்க வைக்கப்படும். இந்த உணவு செரிமானத்தை துரிதப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

  2. காய்கறிகள்- என்னதான் கொரிய மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிட்டாலும், அவர்களின் பிரதான உணவாக காய்கறிகள் இருக்கிறது. தினசரி அவர்களது உணவில் போதுமான அளவு காய்கறி இருப்பதை அவர்கள் உறுதி செய்து கொள்கின்றனர். இதுதான் அவர்களை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. 

  3. கடல் உணவுகள் - கொரிய மக்கள் கடல் உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதில் உடலுக்கு வேண்டிய எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. சொல்லப்போனால் இவர்கள் உணவில் தினசரி கடல் உணவு ஏதாவது ஒன்று இருக்கும். இதில் போதுமான அளவு புரோட்டின் மற்றும் மிகக் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், மற்ற இறைச்சிகளை விட இவற்றை உட்கொள்ளும்போது எளிதில் செரிமானமாகி நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. 

  4. நடைப்பயிற்சி - பொதுவாகவே கொரிய மக்கள் அதிகம் நடப்பவர்கள். அவர்களது வாழ்க்கை முறையே அப்படி தான். அத்துடன் அருகில் எங்காவது செல்ல வேண்டும் என்றாலும் இருசக்கர வாகனத்திற்கு பதிலாக சைக்கிளையே பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் தொலைதூர பயணங்களுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்தும் இவர்கள், அதிகம் நடக்கும் பழக்கம் உடையவர்கள் என்பதால் ஆரோக்கியமாக இருக்கின்றனர். 

  5. வீட்டில் சமைத்து உண்பார்கள் - குடிமக்கள் உண்ணும் உணவுகளில் பெரும்பாலானவை வீட்டில் சமைத்ததாகவே இருக்கும். வெளியிடங்களில் சென்று சாப்பிடுவது என்பது மிகவும் அரிது. குறிப்பாக ஃபாஸ்ட் ஃபுட் உணவை இவர்கள் விரும்பாததால் உடல் எப்போதும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com