உங்கள் வீட்டில் கட்டாயம் வைக்க வேண்டிய 5 செடிகள்!

House Plants
House Plants

மரம், செடி, கொடிகள் ஆகியவை நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் செடிகளை வீட்டில் வைப்பதற்கு ஒரு தனியான இடம் வேண்டுமா என்ன? நமது வீடை அழகாகக் காண்பிக்க வீட்டிற்குள்ளேயே செடிகளை வைக்கலாமே. வீட்டுக்குள் சில செடிகள் வைப்பதால், நம் உடலுக்கும் ஆரோக்கியம்தான்.

அந்தவகையில் எந்த ஐந்து செடிகளை கட்டாயம் உங்கள் வீட்டில் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. Snake Plant:

Snake Plant
Snake Plant

Snake Plant என்றழைக்கப்படும் பாம்புக் கற்றாழை ஒரு முக்கியமான மூலிகைச் செடியாகும். இந்தோனேசியாவில் உள்ள வீடுகளில் அதிகம் காணப்படும் இந்த ஸ்னேக் தாவரம், இந்திய வீடுகளிலும் அதிகம் காணலாம். பல பேர் இந்தச் செடியை அழகுக்காக மட்டுமே வீட்டில் வைக்கிறார்கள். ஆனால் இந்தச் செடி, காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சும் தன்மையுடையது. மாசு வாய்ந்த காற்றை உறிஞ்சி, அதனை சுத்தமான ஆக்ஸிஜனாக வெளியேற்றும். புகைப்பழக்கம் கொண்டவர்கள் தங்கள் வீடுகளில் இந்தச் செடியை வைப்பது அவசியமாகும்.

2. English Ivy:

English Ivy
English Ivy

இந்தச் செடிகளை வீடுகளின் கூரைகள் மேல் அழகுக்காகப் படர விட்டிருப்பார்கள். இது காற்றில் உள்ள Formaldehyde மற்றும் அசுத்தத்தை நீக்கும் தன்மைக் கொண்டது. காற்றைச் சுத்தமாக்கும் இந்தத் தாவரம் அனைத்துப் பருவங்களிலும் வாழக்கூடியது.

3. கற்றாழை:

கற்றாழை
கற்றாழை

கற்றாழை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. காயங்களை சரி செய்வதோடு, கூந்தல் மற்றும் சருமத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதுபோன்ற எண்ணற்ற நன்மைகள் கற்றாழையில் அடங்கியுள்ளன.

4. Spider Plant:

Spider Plant
Spider Plant

இந்த Spider செடியும் காற்றில் இருக்கும் Formaldehyde மற்றும் Carbon monoxide போன்றவற்றை அகற்றி சுத்தமான காற்றாக மாற்றுகிறது. இந்தச் செடியை பராமரிப்பதும் எளிதுதான். ஏனெனில், குறைந்த அளவு நீரும், சூரிய ஒளியும் இருந்தால் மட்டுமே போதும். அதேபோல், இது செல்லப்பிராணிகளையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

5. Rubber Plant:

Rubber Plant
Rubber Plant

இந்த Rubber Plant வைத்திருந்தால், காற்று சுத்திகரிப்பு இயந்திரங்கள் எல்லாம் தேவையே இல்லை. மேலும் இது வீட்டிலிருந்தால், காற்றினால் பரவக்கூடிய நோய்கள் கூட வராது. அதேபோல் தோல் அழற்சி போன்ற எந்தத் தோல் வியாதிகளும் ஏற்படாது. இந்த செடிக்கு மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் ஊற்றினால் போதும், பல நாட்கள் அழகாக காட்சியளிக்கும். அதேபோல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com