AC வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

5 things to keep in mind while buying an AC!
5 things to keep in mind while buying an AC!

கோடை காலம் தொடங்கிவிட்டாலே ஏசி விற்பனை அமோகமாக நடக்கும். நமது ஊரின் வெப்ப நிலைக்கு ஏசி ஆடம்பரம் என்பதை விட தேவைப்படும் ஒன்றாகவே கருதப்படுகிறது. இப்போது சந்தையில் பல்வேறு ஏசி வகைகள் கிடைக்கும் நிலையில், சரியான ஏசியைத் தேர்ந்தெடுப்பது சவாலானதாகும். எனவே இந்தப் பதிவில் ஏசி வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள் பற்றி பார்க்கலாம். இவற்றை நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலமாக சரியான ஏசியை தேர்வு செய்து வாங்க முடியும். 

1. குளிரூட்டும் திறன்: நீங்கள் ஏசி வாங்க முடிவெடுத்தால் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது அதன் குளிரூட்டும் திறன்தான். இது 1 Ton, 1.5 Ton, 2 Ton என பிரிட்டிஷ் வெப்ப அலகுகளில் அளவிடப்படுகிறது. ஏசியின் குளிரூட்டும் திறனை உங்கள் அறையின் அளவோடு பொருத்திப் பார்க்க வேண்டும். சரியான ஏசியை நீங்கள் தேர்வு செய்யாத போது, உங்கள் அறையை முறையாக அது குளிர்விக்காமல் போகலாம். அல்லது அறைக்கு தேவையான திறனை விட அதிக திறன் கொண்ட ஏசியை வாங்கினால், அதிக ஆற்றல் நுகர்வு மற்றும் குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் அறைக்கு ஏற்ற சரியான குளிரூட்டும் திறன் கொண்ட ஏசியை தேர்வு செய்யவும். 

  • Up to 100 square feet - 0.8 ton

  • Up to 150 square feet - 1 ton

  • Up to 250 square feet - 1.5 ton

  • Up to 400 square feet - 2 ton

2. ஆற்றல் நுகர்வு: சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் நீண்ட கால அடிப்படையில் செலவுகளைக் குறைக்கவும் அதிக ஆற்றல் திறன் கொண்ட ஏசியைத் தேர்வு செய்வது நல்லது. அதாவது இதை ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் குறிப்பிடுவார்கள். 3 Star ரேட்டிங் கொண்ட ஏசிகள் அதிக மின்சாரத்தையும், 5 Star ரேட்டிங் கொண்ட ஏசிகள் குறைந்த மின்சாரத்தையும் பயன்படுத்துகின்றன. 

3. ஏசி வகை: இப்போது பல்வேறு வகையான ஏசிக்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் அதன் சொந்த நன்மைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றது. விண்டோ ஏசி, ஸ்பிலிட் ஏசி, போர்ட்டபிள் ஏசி மற்றும் சென்ட்ரலைஸ்ட் ஏசி அமைப்புகள் என பலவகையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஸ்பிலிட் ஏசிகள் அதிகம் வாங்கப்படுகின்றன. எனவே உங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் ஏசி வகை எது என்பதைத் தேர்வு செய்யவும்.

4. ஒலி அளவு: ஏசி யூனிட் உருவாக்கும் சத்தம் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம். குறிப்பாக பெட்ரூம் அலுவலகங்கள் போன்ற அமைதியாக இருக்க வேண்டிய இடங்களில், குறைந்த (dB)டெசிபல் சத்தம் உருவாக்கும் ஏசி பொருத்துவது நல்லது. அமைதியான மற்றும் இடையூறு இல்லாத சூழலை நீங்கள் விரும்பும் நபராக இருந்தால், குறைந்த சத்தமுடைய ஏசிகளை தேர்ந்தெடுங்கள்.  

இதையும் படியுங்கள்:
Lemon Face Mask: முகப்பொலிவுக்கு உதவும் எலுமிச்சை! 
5 things to keep in mind while buying an AC!

5. கூடுதல் அம்சங்கள்: தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இப்போது வரும் ஏசி யூனிட்களில் பல அம்சங்கள் வருகின்றன. அவை பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தக்கூடும். தானாக சரிசெய்து கொள்ளக்கூடிய பேன் வேகம், டைமர்கள், ஸ்லீப் மோடுகள், ஏர் கிளீனிங், டிரை மோடு மற்றும் ஸ்மார்ட் இணைப்பு போன்றவை இப்போது வரும் ஏசிகளில் பொதுவான அம்சங்களாகும். இவற்றில் உங்களுக்கு எந்த அம்சம் முக்கியமானவை என்பதைத் தேர்ந்தெடுத்து, அவை இருக்கும் ஏசியை வாங்குவது நல்லது. 

நீங்கள் ஏசி வாங்குவதற்கு முன் இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்தி வாங்குங்கள். கூடுதலாக ஏசி வாங்கிய பிற்பாடு ஏதேனும் பிரச்சனை என்றால், அதை முறையாக சரி செய்யும் கஸ்டமர் சப்போர்ட் இருக்கும் பிராண்டாக தேர்ந்தெடுப்பது நல்லது. ஏசி ஒருமுறைதான் வாங்க போகிறீர்கள். எனவே உங்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்காத பிராண்டாகத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு பல வகைகளில் நன்மை புரியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com