5 tips to reduce electricity bills no matter how much the AC runs!
5 tips to reduce electricity bills no matter how much the AC runs!

ஏசி எவ்வளவு ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வருவதற்கான 5 டிப்ஸ்!

Published on

கோடைகாலம் நெருங்கும்போது கொளுத்தும் வெயிலால் ஏசியின் பயன்பாடு அதிகரிக்கிறது. ஆனால் ஏசியை வெகு நேரம் பயன்படுத்தினால் மின்கட்டணம் அதிகரிக்கும். இது பலருக்கு பெரும் கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் வெகு நேரம் ஏசி ஓடினாலும் குறைவான மின்கட்டணம் வரும்படி நாம் பார்த்துக்கொள்ள முடியும்.

1. ஏசி தெர்மோஸ்டாட்: ஏசி மின் கட்டணத்தை குறைப்பதற்கு எளிய, மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்று அதன் தெர்மோஸ்டாட் செட்டிங்கை சரியானபடி வைப்பதாகும். அதாவது நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்களுக்கு வசதியாக இருக்கும் அதிகபட்ச வெப்ப நிலைக்கு ஏசி செட்டிங்கை அமைக்கவும். நீங்கள் வெப்பநிலையை உயர்த்தும் ஒவ்வொரு டிகிரியும் குறிப்பிடத்தக்க மின்சார சேமிப்புக்கு வழிவகுக்கும். உதாரணத்திற்கு இந்தியாவில் 24 டிகிரி செல்சியஸ் என்பது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஏசி செட்டிங்ஸ் ஆகும். இதுவே நீங்கள் 25 டிகிரியில் பயன்படுத்தினால், சுமார் ஆறு சதவீதம் வரை மின் கட்டணத்தைக் குறைக்கலாம் என சொல்லப்படுகிறது.

2. சீலிங் ஃபேன் பயன்படுத்துங்கள்: ஏசி ஓடும்போது மிகவும் குறைந்த வேகத்தில் சீலிங் ஃபேன் பயன்படுத்தினால் அறை விரைவில் குளிர்ச்சியாகி, ஏசியின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரப் பயன்பாட்டை குறைக்க முடியும்.

3. காற்று வெளிய போகாதபடி சீல் செய்யவும்: உங்கள் அறையில் உள்ள காற்று வெளியே கசியும்போது ஏர் கண்டிஷனிங் அமைப்பின் செயல்திறனை கணிசமாக பாதிக்கிறது. எனவே காற்று வெளியேறக்கூடிய கதவு, ஜன்னல்கள் மற்றும் பிற பகுதிகளை ஆய்வு செய்து, காற்று வெளியேறாத படி மூடுங்கள். இப்படி வெளியே இருக்கும் சூடான காற்று உங்கள் அறையின் உள்ளே நுழைவதைத் தடுப்பது மூலமாக குளிர்ந்த காற்று உள்ளே இருந்து வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இது ஏசியின் அழுத்தத்தைக் குறைக்கும்.

4. ஏசியை பராமரிக்கவும்: உங்கள் ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தைத் தொடர்ந்து பராமரிப்பது மூலமாக அது சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏர் பில்டர்களை சுத்தம் செய்வது அல்லது மாற்றுவது போன்றவற்றை முறையாக செய்யுங்கள். மேலும் வேறு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா என்பதை சரி பார்த்து அவ்வப்போது சரிசெய்து விடுவது நல்லது.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்கு ஏசி வாங்கப் போறீங்களா? இந்த 6 விஷயங்கள கவனிச்சு வாங்குங்க! 
5 tips to reduce electricity bills no matter how much the AC runs!

5. அதிக ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏசி வாங்கவும்: அதிக குளிரூட்டும் திறன் கொண்ட ஏசியை நீங்கள் தேர்வு செய்யும் அதே வேளையில், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிக ஸ்டார் ரேட்டிங் ஏசி யூனிட்டிகளை வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஏசிக்கள் அதன் குறைந்த ஆற்றல் பயன்பாட்டுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல சேமிப்பு கிடைக்கும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, ஏசி வெகு நேரம் ஓடினாலும் அதன் மின்கட்டணத்தை கணிசமாக உங்களால் குறைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com