உங்கள் மூக்குக் கண்ணாடி முகம் பார்க்கும் கண்ணாடி போல் மின்ன...

Specs
Specs
Published on

நீங்கள் மூக்குக் கண்ணாடி அணிபவராயிருந்தால், அதை நீங்கள் தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அழுக்காகவும் மங்கலாகவும் உள்ள லென்ஸ்கள், உங்கள் பார்வையை மறைப்பது மட்டுமின்றி உங்களை எரிச்சலூட்டவும் செய்யும். சிலர் கையில் கிடைத்த துணியைக் கொண்டு கண்ணாடியைத் துடைப்பது அல்லது குழாயைத் திறந்து தண்ணீரில் கழுவி எடுக்கும் பழக்கம் உடையவராயிருப்பர். அப்படி செய்யும்போது லென்ஸ்கள் மீது கோடுகள் விழுந்து அதன் ஆயுட் காலம் குறைந்துவிட வாய்ப்பு உண்டாகும். கண்ணாடி புதிது போல் மின்ன வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய வழி முறைகள் இதோ...

1. அரை கப் லேசா சூடான நீரில் சில துளிகள் அடர்த்தி குறைவான திரவ சோப்பை (Mild liquid soap) சேர்த்துக் கரைக்கவும். இக்கரைசலை மெதுவாக லென்ஸ்களின் மேற்பரப்பில் பூசவும். பிறகு ஒரு மெல்லிய சுத்தமான காட்டன் துணியைக் கொண்டு துடைத்து சுத்தம் செய்யவும். இம்முறையில் லென்ஸ் மீது படர்ந்திருக்கும் தூசு மற்றும் பிசுபிசுப்பான அழுக்குகளை, லென்ஸுக்கு எவ்வித சேதாரமமுமின்றி நீக்க முடியும்.

2. தண்ணீரில் சில துளிகள் வெள்ளை வினிகரைக் கலந்து, கரைசலை ஒரு ஸ்பிரே பாட்டிலுக்குள் ஊற்றவும். கண்ணாடி அழுக்கடைந்து காணப்படும்போது இக்கரைசலை லென்ஸ்கள் மீது ஸ்பிரே பண்ணி, பின் ஒரு மைக்ரோஃபைபர் அல்லது காட்டன் துணியைக் கொண்டு மெதுவாக துடைத்து சுத்தம் செய்யலாம். இது அழுக்குகளை நீக்குவதுடன் லென்ஸ்கள் பள பளப்புப் பெறவும் உதவும்.

3. விடாப்பிடிக் கறை மற்றும் கிரீஸ் போன்ற அழுக்கு லென்சில் படிந்திருந்தால் என்ன செய்யலாம்? சில துளி ரப்பிங் (rubbing) ஆல்கஹாலை எடுத்து தண்ணீரில் கரைக்கவும். அதனுடன் சிறிது திரவ டிஷ் வாஷ் சோப் கலந்து, அக்கரைசலை ஸ்பிரே பாட்டிலுக்குள் ஊற்றவும். இப்போது அதை அழுக்கு படிந்த லென்ஸ்கள் மீது தெளித்து, மெதுவாக சுத்தமான துணியால் துடைக்கவும். உடனடியாக கறைகள் நீங்கி விடும்.

4. ஒரு மைக்ரோஃபைபர் துணியை எப்பொழுதும் பையில் வைத்துக்கொண்டு, வெளியில் செல்லும்போது எப்போதெல்லாம் லென்சில் தூசு படிகிறதோ அப்போதெல்லாம் உடனடியாக துடைத்து சுத்தப்படுத்திவிட்டால் லென்சில் கோடுகள் விழாமல் கண்ணாடி பாதுகாப்பாக இருக்கும்.

5. அதி விரைவில் லென்ஸ்களை சுத்தப்படுத்த விரும்பும்போது, சம அளவு டிஸ்டில்ட்டு வாட்டரும் விச் ஹேசலும் (Witch Hazel) கலந்து, கரைசலை ஸ்பிரே பாட்டிலுக்குள் ஊற்றி லென்ஸ்கள் மீது லைட்டா தெளித்து மைக்ரோஃபைபர் துணியால் துடைத்து விட லென்ஸ்கள் தூய்மையடைந்து புதிது போல் மின்னும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்
Specs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com