குழந்தைகளை எளிதாகப் படிக்க வைக்கும் 6 ஐடியாக்கள்!

ஆர்வமுடன் படிக்கும் குழந்தை
ஆர்வமுடன் படிக்கும் குழந்தை
Published on

ங்கள் வீட்டில் என்ன பிரச்னை வருகிறதோ இல்லையோ பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை என்ற பிரச்னை நிச்சயம் இருக்கும். ‘பிள்ளைகள் சரியாகப் படிப்பதில்லை, கவனமாகப் படிப்பதில்லை, சொல்பேச்சு கேட்பதில்லை’ என்று புகார்கள் வாசித்தபடியேதான் இருப்பார்கள். ஆனால், நம் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு படிக்கும் சூழ்நிலை உள்ளதா? அதை நாம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா என்பதை பற்றி எல்லாம் சிந்திப்பதே இல்லை. நம் வீட்டுக் குழந்தைகளை எளிதாகப் படிக்க வைக்க உதவும் 6 ஐடியாக்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. சரியான வாழ்க்கை முறை: உலக சுகாதார மையத்தின் அறிவிப்பின்படி யோகாசனம் செய்வது பிள்ளைகளின் படிப்பில் நேர்மறை விளைவுகளை உருவாக்கும். அது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். துரித உணவுகள், உடலுக்கு கெடுதல் தரும் உணவுகள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். மேலும், சீரான உடற்பயிற்சி செய்வதும் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதுடன் அவர்களின் படிப்பில் நேர்மறை மாற்றங்களை உண்டாக்கும்.

2. பாராட்டு:  பிள்ளைகளை அவ்வப்போது அவர்கள் செய்யும் நற்செயல்களுக்காக பாராட்ட வேண்டும். அதை விடுத்து அடிக்கடி அவர்கள் செய்யும் தவறை மட்டுமே குறை கண்டுபிடித்துக் கொண்டே இருந்தால் அது அவர்களுக்கு கவனச் சிதறலை உண்டாக்கும். முடிந்த அளவு குழந்தைகளை பாராட்ட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அதிக கவனத்துடன் எதையுமே செய்வார்கள். இந்த முறையைக் கொண்டே அவர்களை படிக்கும்படி ஊக்கப்படுத்தலாம்.

3. ஓய்வு: இன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போது பார்த்தாலும் அவர்களிடம் அதிக அழுத்தம் கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். நாள் முழுவதும் ஒரு குழந்தை படித்துக்கொண்டே இருந்தால் உடல் அளவிலும் மனதளவிலும் பெரிய அளவில் சோர்வு ஏற்படும். எனவே, பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டுமெனில் குறைந்தது எட்டு மணி நேர தூக்கம் அவசியம். அப்பொழுதுதான் படிக்கும்போது, படிப்பது அவர்கள் மனதில் தெளிவாகப் பதியும்.

படிப்பதை வெறுக்கும் குழந்தை
படிப்பதை வெறுக்கும் குழந்தை

4. சரியான சூழல்: உங்கள் பிள்ளை படிப்பதற்காக அடிக்கடி வெளியே செல்கிறார்கள் என்றால் உங்களுடைய வீட்டில் படிப்பதற்கேற்ற சூழல் சரியாக இல்லை என்று பொருள். அதை சரி செய்யாமலேயே நீங்கள் மீண்டும் மீண்டும் பிள்ளைகளை படி படி என்று வற்புறுத்திக் கொண்டிருந்தால் அது அவர்களுக்கு சுமையாக தெரியுமே தவிர, படிப்பில் ஆர்வத்தை உண்டாக்காது. எனவே, படிப்பதற்கேற்ப சரியான, அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவர்களைப் படிக்க ஊக்கப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
விதவிதமான எலுமிச்சைகளும் வித்தியாசமான ஆரோக்கியப் பலன்களும்!
ஆர்வமுடன் படிக்கும் குழந்தை

5. ஊக்கமளித்தல்: படி படி என்று அவர்களின் மேல் அழுத்தம் கொடுக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பிள்ளைகள் நன்றாகப் படிக்கச் செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கடினமான விஷயங்களை விளக்கும்போது சிரித்துக் கொண்டே மிகவும் சாதாரணமாக விளக்கினால் பிள்ளைகளும் அதனை சிரமம் இல்லாமல் புரிந்து கொள்வார்கள்.

6. நேரம் ஒதுக்குங்கள்: எந்த நேரமும் படிப்பு படிப்பு என்று மட்டும் இல்லாமல் சிறிது நேரம் வெளியில் வெளியே விளையாட விடுங்கள். கிரவுண்டுகள் அல்லது பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். செல்போன் நோண்டுவதை தவிர்த்து உடற்பயிற்சியோடு சேர்த்து விளையாடச் சொல்லுங்கள் அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய நன்மையை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com