ஒருவரைப் பற்றி எப்போதும் நினைப்பதற்கான 6 காரணங்கள்!

6 Reasons to Always Think About Someone!
6 Reasons to Always Think About Someone!
Published on

“அச்சச்சோ! எனக்கு எப்பவுமே அந்த குறிப்பிட்ட நபருடைய நினைப்பாகவே இருக்கிறதே. இதற்கு என்ன காரணமாக இருக்கும்” என யோசிக்கிறீர்களா? இது மனித மனதின் ஒரு இயல்பான விஷயம்தான். இந்த உணர்வு நம்மை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ மாற்றலாம். இது நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கை வகித்த நபர்களை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்த உணர்வு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் பதிவில் அதற்கான 6 முக்கிய காரணங்கள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.‌

  1. அன்பும் பாசமும்: ஒருவரை நாம் அதிகமாக நேசிக்கும்போது அவரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்போம். இந்த அன்பு நட்பு, குடும்பம் அல்லது காதல் போன்ற பல்வேறு வகையான உறவுகளில் ஏற்படலாம். அவர்களின் மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சியாகவும், அவர்களின் துக்கம் நமக்கு துக்கமாகவும் இருக்கும்.

  2. ஆர்வம்: ஒருவர் நம்மை ஆச்சரியப்படுத்தி புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கும்போது அவரைப் பற்றி நாம் எப்போதுமே நினைத்துக் கொண்டே இருப்போம். அவர்களின் திறமை, அறிவு மற்றும் ஆளுமை நம்மை வெகுவாக ஈர்க்கும். 

  3. கடந்த கால நினைவுகள்: நம் வாழ்வில் நடந்த சில இனிமையான அல்லது வேதனையான நினைவுகள் ஒரு குறிப்பிட்ட நபருடன் தொடர்புடையதாக இருக்கும். இந்த நினைவுகள் நம் மனதில் ஆழமாகப் பதிந்து அவரைப் பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்க வைக்கும்.

  4. தேவைகள்: நமக்குத் தேவையான பாசம், அங்கீகாரம் அல்லது பாதுகாப்பு போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே தர முடியும் என்றால், அவரைப் பற்றிய நினைப்பு நமக்கு அவ்வப்போது வந்து கொண்டே இருக்கும். 

  5. இழப்பு: நம்முடன் நெருக்கமாக இருந்த ஒருவரை இழந்த பிறகு அவரைப் பற்றி நாம் எப்போதுமே நினைத்துக் கொண்டே இருப்பது இயல்பானது. இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள நமக்கு நேரம் தேவைப்படும் என்பதால், கொஞ்ச காலத்திற்கு அப்படிதான் இருக்கும். 

  6. பயம்: நமக்கு பிடித்த ஒருவருக்காக நாம் அதிகமாக கவலைப்படும்போது அவரைப்பற்றி நாம் எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்போம். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நம்மை ஆட்டிப்படைக்கும். 

இதையும் படியுங்கள்:
வெற்றி அடைய போகிறோம் என்ற உணர்வு எப்படி இருக்கும்? அனுபவித்ததுண்டா நண்பர்களே?
6 Reasons to Always Think About Someone!

ஒருவரைப் பற்றி எப்போதுமே நினைத்துக்கொண்டே இருப்பது என்பது, ஒரு சிக்கலான உணர்வுதான்.‌ இது நம் தினசரி வாழ்க்கையை வெகுவாக பாதிக்கலாம். ஆனால் இந்த உணர்வுக்கான காரணத்தை புரிந்து கொள்ளும்போது அதை எவ்வாறு கையாள்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com