கெட்ட புள்ளயா நீங்க? இந்த 6 குணங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே மாத்திக்கோங்க!

இப்பதிவில் இருக்கும் ஆறு குணங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் கெட்ட புள்ளதான். படித்து உங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
bad character
bad characterimge credit - iStock
Published on

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குணம் உண்டு. சிலருக்கு எப்பொழுதும் நல்ல குணம் சிலருக்கு எப்பொழுதும் கெட்ட குணம். நல்ல குணமா கெட்ட குணமா என்று நமக்கு எதிரில் இருப்பவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் நம்மிடம் இருக்கும் கெட்ட குணங்களை நாமே எப்படி கண்டுபிடிப்பது?

இப்பதிவில் இருக்கும் ஆறு குணங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் கெட்ட புள்ளதான். படித்து உங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

முதலாவது குணம்:

ஒரு விஷயத்தில் அதிக முரண்பாடுகள் கொண்ட குணம் கெட்ட குணம் ஆகும். அதாவது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயத்தில், அனைவரும் ஒத்துப்போகும் ஒரு விஷயத்தில், யார் ஒத்துபோகவில்லையோ அவர்கள் கெட்ட குணம் கொண்டவர்கள். இது போல் உங்களுக்கும் குணம் இருந்தால் அதனை நினைத்து கவலை படாமல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

இரண்டாவது குணம்:

இரண்டாவது குணம் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது. நாம் செய்யும் விஷயத்தில் சரியாக இருப்பதை எப்படி ஒப்புக்கொள்கிறோமோ அதேபோல் நாம் செய்யும் தவறுகளையும் ஒப்புக்கொள்வது பெரிய குணம். அதனால் உங்களுக்கு தவறுகளை ஒப்புக்கொள்ள முடியாத குணம் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பழக்க தோஷங்களுக்கு அடிமையாகாதீர்கள்!
bad character

மூன்றாவது குணம்:

மூன்றாவதாக பார்க்கபோகிற குணம் போலியான முகம். பொதுவாக அனைவருக்கும் இரண்டு விதமான முகம் இருக்கும். அதில் வீட்டில் ஒரு மாதிரியும், வேலை பார்க்கின்ற இடத்தில் ஒரு மாதிரியும் இருப்பார்கள். அது தொழிலில் முன்னேற்றத்திற்கு நல்லதாக இருந்தாலும் உறவுகளுக்கு இடையே தவறாக இருக்கும். அதனால் இந்த இரட்டை குணம் கெட்ட குணம்!

நான்காவது குணம்:

நான்காவதாக பார்க்கபோகிற விஷயம் பொறாமைப்படுவது. ஒரு மனிதர் அல்லது உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது நன்றாக வாழ்ந்தார்கள் என்றால் அல்லது வெற்றி பெறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை பார்த்து எதற்காகவும் பொறாமை கொள்ள கூடாது.

இதையும் படியுங்கள்:
கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்... அப்படீன்னா?
bad character

ஐந்தாவது குணம்:

ஐந்தாவதாக பார்க்கபோகிற குணம் போட்டி மனப்பான்மை ஆகும். போட்டி என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமே தவிர பொறாமையின் பேரில் இருப்பதோ அல்லது ஒருவரை வீழ்த்துவதற்காக இருப்பதோ கூடாது. போட்டி போடும் குணம் எதிர்மறை எண்ணங்களோடு இருந்தால், அது ஒரு நச்சு குணம் என்று சொல்வார்கள். உங்களை மாய்த்து விடும்.

ஆறாவது குணம்:

ஆறாவதாக குறை சொல்வது. இந்த குணம் மனிதனுக்கு இருக்கக்கூடிய கெட்ட குணம் ஆகும். பக்கத்து வீட்டில் போய் எதிர்வீட்டில் உள்ளவர்களை பற்றி பின்னால் பேசுவது தவறான தீய குணமாகும். ஒருநபரை பற்றி பின்னால் பேசவே கூடாது. நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி அது மிகவும் கெட்ட குணம்.

இதையும் படியுங்கள்:
இலக்கை அடையவிடாமல் தடுக்கும் 10 கெட்ட பழக்கங்கள் எவை தெரியுமா?
bad character

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com