உங்கள் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க ஆசையா? இந்த 6 விஷயங்களை சரியாகச் செய்யுங்கள்! 

Happy Wife.
Happy Wife.

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் சிக்கலான உறவாகும். இதில் கொஞ்சம் தவறு நிகழ்ந்தாலும் அந்த உறவுமுறை கசந்து போக வாய்ப்புள்ளது. பல கணவன்களுக்கு தன் மனைவியை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. எனவே இந்த பதிவில் மனைவியை மகிழ்ச்சிப் படுத்த கணவன்கள் செய்ய வேண்டிய 6 விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
எடையைக் குறைக்க உதவும் Detox Water வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
Happy Wife.
  1. மரியாதை கொடுங்கள்: எந்த உறவாக இருந்தாலும் அதில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியம். ஒரு நல்ல உறவு என்பது அன்பு மற்றும் மரியாதையில் தான் உள்ளது. மனைவிக்கு மரியாதை கொடுக்கும் ஆண்களை பெண்களுக்கு என்றுமே பிடிக்கும். மேலும் இத்தகைய குணம் பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கும். எனவே கணவன் மனைவிக்கு மத்தியில் மரியாதை என்பது, திருமண வாழ்வை சிறப்பாக வழிநடத்த உதவும்.

  2. தற்பெருமை வேண்டாம்: எந்த கணவன் தன் மனைவியிடம் தற்பெருமை பேசுகிறானோ அந்த உறவு நீண்ட நாள் நீடிக்காது. இது காலப்போக்கில் ஈகோவை அதிகரிக்கச் செய்து பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வரும். கணவன் மனைவியில் யாருக்கு ஈகோ இருந்தாலும் அது உறவில் நிம்மதியை ஏற்படுத்தாது. குறிப்பாக திமிர் அதிகம் கொண்ட கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை. எனவே உங்களது உறவு நீண்ட காலம் நீடிக்க மனைவியிடம் தற்பெருமை பேசாதீர்கள். 

  3. பாதுகாப்பு வழங்குங்கள்: பெண்கள் எந்த ஒரு ஆணிடம் பாதுகாப்பாக உணர்கிறார்களோ அந்த ஆண்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மனைவியை பாதுகாக்க முடியாத கணவன், தன் துணையுடன் நீண்ட காலம் நிம்மதியாக வாழ முடியாது. எனவே கணவன் தன் மனைவியை பாதுகாப்பாக உணர வைப்பது மிகமுக்கியம். 

  4. உங்கள் விருப்பங்களை திணிக்காதீர்கள்: இந்த விருப்பங்களைத் திணிப்பதென்பது கணவன் மனைவி உறவுக்குள் மட்டுமின்றி, யாரும் தான் விரும்புவது போல பிறர் இருக்க வேண்டும் என்பதை திணிக்கக் கூடாது. கணவன்கள் தன் மனைவியை அவர்கள் விரும்பியபடி வாழ விடுங்கள். அவர்களுடைய ஆசை மற்றும் கனவுகளை அடைய உதவுங்கள். ஆனால் பல ஆண்கள் தங்கள் மனைவியின் மீது அதிக உரிமையை எடுத்துக்கொண்டு டாமினேட் செய்ய முயல்கிறார்கள். கணவன்கள் பெண்களின் விருப்பத்தையும் கேட்டு முடிவு எடுத்தால் மட்டுமே பெண்களுக்கு பிடித்த கணவராக நீங்கள் இருக்க முடியும். 

  5. மனைவி மீது நம்பிக்கை வேண்டும்: எல்லா உறவிலும் நம்பிக்கை மிக முக்கியமானது. அதுவும் தாம்பத்திய வாழ்வில் கணவன் மனைவி என இருவரும் ஒருவரை ஒருவர் நம்ப வேண்டும். நம்பிக்கை இல்லாமல் எந்த உறவும் சிறக்காது. எனவே கணவன் மனைவி உறவை பலப்படுத்த நம்பிக்கை முக்கியம். 

  6. அமைதியாக இருங்கள்: சில கணவன்மார்கள் தான்தான் அனைத்திலும் பெரியவன் என எல்லா விஷயங்களுக்கும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் உறவுமுறைக்குள் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சமாதானமாக இருந்து சரி செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை அனைத்து தருணங்களையும் அமைதியாக கொண்டு செல்ல முயலுங்கள். அமைதியான மனநிலைதான் நல்லது கெட்டதை வேறுபடுத்தி சரியான முடிவுகளை எடுக்க உதவும். எனவே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு அமைதியான மனநிலை மிக முக்கிய. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com