குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கும் முன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்! கவனிக்காவிட்டால்? 

6 things to consider before giving Mangoes to children.
6 things to consider before giving Mangoes to children.

மாம்பழங்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு சுவையான உணவு மட்டுமல்ல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு சத்தான உணவும் கூட. இருப்பினும் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு மாம்பழத்தைக் கொடுப்பதற்கு முன் சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இப்பதிவில் நான் சொல்லப் போகும் விஷயங்களை முழுமையாகப் படியுங்கள். 

இதையும் படியுங்கள்:
பழக்கூழ் தயாரிப்பில் முதன்மை பெறும் தோதாபுரி மாம்பழம்!
6 things to consider before giving Mangoes to children.
  1. வயது: குழந்தைகளுக்கு மாம்பழங்களைக் கொடுக்கும்போது அவர்களின் வயதை கவனிக்க வேண்டும். மாம்பழம் போன்ற திட உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன், அவர்கள் 6 மாதங்களைக் கடந்திருக்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது. எனவே உங்கள் குழந்தை மாம்பழம் சாப்பிட தகுந்த வயதில் உள்ளனரா என்பதை கவனிக்கவும். 

  2. ஒவ்வாமை: மாம்பழங்கள் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். இது மிகவும் அரிதானதுதான் என்றாலும், சில குறிப்பிட்ட பழங்களுக்கு ஒவ்வாமை இருக்கும் நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைக்கு மாம்பழம் கொடுப்பதன் மூலம் ஒவ்வாமை ஏதேனும் வருகிறதா என்பதை கவனித்து கொடுக்கவும். 

  3. வாய்ப்புண் ஏற்படலாம்: மாம்பழங்களில் உள்ள நார்ச்சத்து மற்றும் உருஷியோல் எனப்படும் இயற்கை நொதி, சில நபர்களுக்கு வாயில் எரிச்சலை ஏற்படுத்தி, புண்களை உண்டாக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு மாம்பழம் கொடுக்கும்போது இப்படி ஏதேனும் எதிர்வினை ஏற்படுகிறதா என்பதை கவனித்து, அவற்றின் அறிகுறிகளைக் கண்காணியுங்கள். 

  4. பழுத்த தரமான மாம்பழங்களைக் கொடுக்கவும்: உங்கள் பிள்ளைக்கு பழுத்த மாம்பழங்களைத் தேர்ந்தெடுங்கள். ஏனெனில் சரியாக பழுக்காத மாம்பழங்கள் ஜீரணிக்க கடினமாக இருக்கும் என்பதால், வயிற்றில் அசௌகரித்தை ஏற்படுத்தும். எனவே மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்கும் போது நன்கு பழுத்ததாகவும், தரமாகவும் இருப்பதை உறுதிசெய்து வாங்குங்கள். 

  5. மிதமான அளவு கொடுக்கவும்: மாம்பழங்கள் சத்தானவை என்றாலும் அவற்றில் சர்க்கரை அதிகமாக உள்ளன. எனவே குழந்தைகளுக்கு மாம்பழங்களை அளவாகக் கொடுப்பது நல்லது. சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக மாம்பழங்களை வழங்குங்கள். இது தவிர மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதையும் ஊக்குவிக்கவும். 

  6. மாம்பழத்தோலில் எச்சரிக்கையாக இருங்கள்: குழந்தைகள் மாம்பழத் தோல் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக சிறு குழந்தைகள் அதை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன், மாம்பழங்களை சரியாக தோலை உரித்து, அவர்களுக்கு ஏற்ற பகுதிகளை வெட்டி சாப்பிடக் கொடுப்பது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com