மனக்குழப்பம் நீங்கி அமைதி பெற 6 வழிகள்!

6 ways to relieve stress
6 ways to relieve stress
Published on

பெரும்பாலான மக்கள் மன அமைதியின்றி குழப்பத்துடனே காணப்படுகின்றனர். நம் மனம் வலிமையாக இருந்தால் மட்டுமே அமைதி பெறும். மனிதனிடம் உள்ள சக்தி வாய்ந்த கருவியான மனம்தான் அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அந்த வகையில் மனக்குழப்பத்தை போக்கும் வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. அதிகம் யோசிக்க வேண்டாம்: ஒவ்வொரு நாளும் காலை உணவுக்கு என்ன சாப்பிட வேண்டும், ஒரு சக ஊழியருடன் என்ன பேச வேண்டும் போன்ற முட்டாள்தனமான விஷயங்களைப் பற்றி அதிகம் யோசிக்காமல் இருந்தாலே மனம் சோர்வடையாமல் அமைதியாக இருக்கும். தேவையற்ற குழப்பங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை அதிகம் யோசிக்காமல் இருப்பதே மிகவும் நல்லது.

2. இல்லை என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்: நம்முடைய மனதில் ஒரு உறுதியான முடிவை எடுத்து நமக்கு அது பிடித்திருந்தால் மட்டுமே செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் நிர்பந்தங்களுக்கு இல்லை என்று சொல்லக் கற்றுக்கொண்டாலே தேவை இல்லாத குழப்பங்கள் தோன்றாமல் மனம் அமைதியான நீரோடை போல இருக்கும். எல்லாவற்றிற்கும் ஆம் என்று சொல்லி சிரமங்களை அனுபவிப்பதை விட, தெளிவுடன் இல்லை என்று சொல்வதனால் மனம் சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. மன உறுதி: அடிக்கடி இச்சா சக்தி என்னும் மனதின் சக்தியை பயன்படுத்துவதால் மன உறுதி ஏற்படும். இச்சா சக்தியை பயன்படுத்துவதால் மனம் வலிமையாக மாறி தேவையற்ற குழப்பங்கள் ஒதுங்கிக் கொள்கின்றன.

4. சிறந்து விளங்குவதற்கான தேடல்: அதிக பணம் சம்பாதிப்பது மற்றும் வெற்றியை விரும்புவது என்றில்லாமல் தனிப்பட்ட முறையில் சிறந்த நபராக இருக்க தொடர்ந்து கற்றுக்கொள்வதால் நாம் வளர முடியும். ஒவ்வொரு கணமும் நாம் நேற்று செய்ததை விட அதிகமாக வளர வேண்டும் என்று சிறந்து விளங்குவதற்கான தேடலில் ஈடுபடும்போது தானாகவே மனம் அமைதி அடைகிறது.

இதையும் படியுங்கள்:
மழைக்கால ஈர வாசனையையும் பூச்சிகளையும் போக்க எளிய வழிகள்!
6 ways to relieve stress

5. எதிர்மறையிலிருந்து விலகி இருத்தல்: எதிர்மறை எண்ணங்களில் இருந்து மற்றும் நச்சு நபர்களிடமிருந்து விலகி இருந்து நேர்மறையான எண்ணங்கள் உடையவருடன் தொடர்பில் இருப்பது மனம் அமைதியான இருப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்.

6. எதிர்காலத்திற்கு தயாராக இருங்கள்: வாழ்க்கையில் எதிர்காலத்தில் எந்த சூழ்நிலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு முதலில் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் பதற்றமின்றி அந்தப் பிரச்னையை எவ்வளவு சுலபமாக தீர்க்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தாலே வலுவடைந்து மனம் அமைதி அடைகிறது. உதாரணமாக மேலதிகாரியுடன் கடினமான வாக்குவாதம் ஏற்படும்போது கவலைப்படாமல் நாம் செய்த வேலையை எவ்வாறு புரிய வைப்பது என்பதை சிந்தித்து மேல் அதிகாரியிடம் பேசி நேர்மறையான அணுகுமுறையை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்கூறிய ஆறு வழிமுறைகளை கையாளுவதன் மூலம் மனக்குழப்பத்திலிருந்து விடுதலை அடைந்து மன அமைதியை பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com