அதிகமான ஷாப்பிங் செய்வதை கட்டுப்படுத்த 7 நாள் விதி!

Shopping
Shopping
Published on

ஆன்லைன் ஷாப்பிங் இல்லையென்றால் கடைகளுக்குச் சென்று யாரும் வீணாக ஷாப்பிங் செய்ய மாட்டார்கள். தற்கால நடைமுறைச் சூழலில் ஆன்லைன் ஷாப்பிங்கைத் தவிர்க்க முடியாது. இருப்பினும் அதிகமாக ஷாப்பிங் செய்வதை குறைத்துக் கொள்ள முடியும். இதற்குத் தான் 7 நாள் விதி நமக்கு உதவுகிறது. அப்படி என்றால் என்ன எனக் கேட்கிறீர்களா? இப்போதே சொல்கிறேன் வாருங்கள்.

நமக்குத் தேவையான பொருள்களை கடைகளுக்கு நேரடியாக சென்று வாங்கும் பழக்கம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. சமையல் பொருள்கள் முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் இப்போது வீட்டிற்கே டெலிவரி செய்யப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் வருகைக்கு பிறகு, தினசரி ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்தியாவசியத் பொருள்களை ஷாப்பிங் செய்வது தேவையான ஒன்று தான். இருப்பினும் ஆன்லைனில் பலரும் தேவையற்ற பொருள்களை வாங்கி குவிக்கின்றனர். இதனால் வீட்டின் பொருளாதார நிலை நிச்சயமாக பாதிப்புக்கு உள்ளாகும்.

நமது வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு செலவிட்டால் தான், நம்மால் கடன் வாங்காமல் தப்பிக்க முடியும். இல்லையேல் கடன் சுமையில் மாட்டி மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அவ்வகையில், நாம் செய்யும் தேவையற்ற ஷாப்பிங்கை கட்டுப்படுத்திக் கொள்ள 7 நாள் விதி என்ற சுய கட்டுப்பாடு அவசியம் தேவைப்படுகிறது.

7 நாள் விதி:

ஒரு பொருளை வாங்க நினைத்தால், அப்பொருளை உடனே வாங்காமல் 7 நாள்களுக்கு தள்ளிப் போடுங்கள். அதாவது, ஒரு வாரம் கழித்து வாங்கிக் கொள்ளலாம் என்று உங்கள் மனதை சமாதானம் செய்யுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் அந்த 7 நாட்களில், இந்தப் பொருள் நமக்குத் தேவை தானா என்பதை சிந்தித்து செயல்படுங்கள். பொருளை வாங்குவதற்கான சொந்த விருப்பத்தை கட்டுப்படுத்துவதை விடவும், தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் மனமும் பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அதனை ஏற்றுக் கொள்ளும்.

7 நாள்கள் முடிவதற்குள் அப்பொருளை வாங்குவதற்கான பணத்தை பட்ஜெட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யலாம். ஒருவேளை இந்த கால இடைவெளியில் இப்பொருளின் மீதான ஆசையும் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் அத்தியாவசிய தேவை எனில் அதற்கேற்ப நிதி ஒதுக்கி வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் சிலிண்டர் இருக்கா? கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க!
Shopping

விரும்பிய பொருள்களை வாங்குவதைத் காட்டிலும் உங்களின் நிதி இலக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நிதி இலக்குகளை பாதிக்கும் பொருள்களை வாங்காமல் இருப்பது தான் சிறந்தது.

உடனடி தேவையில்லாத ஆடைகள், பொழுதுபோக்கு பொருள்கள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு இந்த 7 நாள் விதி மிகவும் கச்சிதமாக பொருந்தும். இடைப்பட்ட நாள்களில் விரும்பிய பொருள்களை தனியாக வரிசைப்படுத்தி பொறுமையாக பரிசீலித்து வாங்குவது நல்லது. நீங்கள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவருக்கும் 7 நாள் விதியை சொல்லி பின்பற்ற செய்வது தான் புத்திசாலித்தனம். இதன் மூலம் தேவையற்ற ஷாப்பிங்கை குறைப்பதோடு, வருமானத்தையும் மிச்சப்படுத்த முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com