பாரம்பரியமான சுடுமண் செங்கற்கள் முதல் சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான மாற்று செங்கற்கள் வரை இன்று கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான செங்கற்களை பற்றி பார்ப்போம்.
செங்கற்கள் என்பது கான்கிரீட், மணல், சுண்ணாம்பு அல்லது களி மண்ணால் செய்யப்படும் ஒரு வகை கட்டுமான பொருட்கள் ஆகும்.
இவை ஈரமான களிமண்ணை வைக்கோல் அல்லது பிற இழை அமைப்புகளுடன் கலந்து வடிவமைத்த பின்னர் வெயிலில் காய வைப்பதன் மூலம் தயாரிக்க படுகிறது இவை உற்பத்தி செய்வதற்கு எளிதாக இருந்தாலும் வலுவான தாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்காது.
இவை ஈரமான களிமண்ணை வடிவமைத்து பின்னர் சூளையில் அதிக வெப்பநிலையில் சுடுவதற்கு மூலம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 4 வெவ்வேறு தரங்களில் செங்கற்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
முதல் தரம்: இவை உயர் தரமானதாகும், அளவு, வடிவம், மற்றும் நிறத்தில் ஒரே மாதிரியானவை, கூர்மையான விளிம்புகளைக் கொண்டது. விரிசல் மற்றும் பிற குறைபாடுகள் இல்லாதவை, தட்டும் போது தெளிவான ஒலியை உருவாக்கும். பொதுவாக பாரம் தாங்கும் கட்டமைப்புகளுக்கும், வெளி சுவர்களுக்கும் முதல் தர செங்கற்கள் பயன்படுத்த படும்.
இரண்டாம் தரம்: இவை பார்க்க முதல் தரம் போல் இருந்தாலும், ஒழுங்கற்ற வடிவங்கள், அளவுகள் அல்லது வண்ணங்கள் போன்ற சிறிய குறை பாடுகளை கொண்டிருக்கும். இவை பாரம் தாங்கும் சுவர்களுக்கு பொருந்தும். ஆனால் வெளி சுவர்களுக்கு பயன்படாது.
மூன்றாம் தரம்: இவை வடிவம், அளவு, நிறத்தில் ஒழுங்கற்றவையாக இருக்கும். மேலும் கணிசமான விரிசல்கள், சிதைவுகள், இருப்பதால் கட்டமைப்புகளுக்கு ஏற்றதல்ல. இவை தோட்ட சுவர் அல்லது நில அழகு வேலை கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தலாம்.
நான்காம் தரம்: இவை மிகவும் குறைந்த தரமாக இருப்பதால் எதற்குமே பயன்படாது.
இவை நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் கழிவுப் பொருள். இதை சிமெண்ட் மற்றும், நீர் ஆகியவற்றை கலந்து கலவையை அச்சுக்குள் அழுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இவை பொதுவாக பாரம் தாங்கும் கட்டமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சிமெண்ட், மணல், தண்ணீரின் கலவையாகும். வலுவானவை, நீடித்து உழைக்கக் கூடியவை. நெருப்பு மற்றும் வானிலையால் பாதிக்கப் படாதவை இந்த செங்கற்கள் பாரம் தாங்கும் கட்டமைப் புகளுக்கும் நடைபாதை தொகுதிக்காகவும் பயன் படுத்தப்படுகிறது
உயர் தர களி மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை மிக அதிக வெப்பநிலையில் சுடப்படுவதால் அவை வலுவானதாகவும், அடர்த்தி யானதாகவும், நீர் மற்றும் இரசாயனங்களின் பாதிக்கப் பட்டதாகவும் உள்ளன. இந்த வகை செங்கற்கள் பொதுவாக பாரத்தைத் தாங்க கூடிய இடங்களிலும் அல்லது நீர் எதிர்ப்பு தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இவை மணல், மற்றும் சுண்ணாம்பில் இருந்து தயாரிக்கப்படும் படுகிறது. மேலும் அவற்றின் வலிமை, நீடித்து உழைக்கும் திறன் மற்றும் தீ எதிர்ப்பு ஆகியவற்றிற்கு பெயர் போனதாகும். அவை இலகுவாகவும், நல்ல காப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. அவை உயரமான கட்டிடங்களில் அல்லது வெப்ப காப்பு தேவைப்படும் பகுதிகளில் பயன்படுத்த ஏற்றதாக இருக்கும்.
மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதம் மற்றும் பிற கழிவுப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான தாகும். மேலும் அவற்றின் நீடித்து உழைக்கும் நன்மைக்காக பிரபல மடைந்தது வருகின்றன.