10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோரா நீங்க? அப்போ இந்த ஏழு விஷயங்கள் முக்கியமாச்சே!

Parenting tips
Parenting
Published on

குழந்தைகள் வளர்ப்பு என்பது சிரமமான விஷயம் தான். ஆனால் அவர்களின் எதிர்காலமே இதில் தான் அடங்கியுள்ளதை அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களின் வாழ்க்கை அன்பில் தான் அடங்கிவிடுகிறது. அதுவும் குழந்தை என்றால் சொல்லவா வேண்டும். அப்படி குழந்தை வளர்ப்பில் முக்கியமான ஒன்று அவர்களுடன் பேசுவது. இதை நவீன காலத்தில் பலரும் செய்ய தவறிவிடுகிறார்கள். வேலை வேலை என்று ஓடவே, குழந்தைகளிடம் அமர்ந்து மனம் விட்டு பேச யாருக்கும் நேரமே கிடைப்பதில்லை. இதனால் தான் இன்றைய குழந்தைகளின் வாயில் ஸ்ட்ரெஸ், டிப்ரஸன் என்ற வார்த்தைகள் அதிகமாக வருகின்றன. இதை குறைக்கவும், உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளரவும் மனம் விட்டு பேசுவது அவசியமாகும். மேலும் சில விஷயங்களை அவர்களுக்கு கற்று கொடுப்பதன் மூலம் அவர்களால் வாழ்க்கையில் தன்னிச்சையாக செயல்பட முடியும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. மரியாதை:

அனைவருக்கும் சரிசமமாக மரியாதை கொடுப்பது அவசியமாகும். வளரும் குழந்தைகள் மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது தெரியாது. மற்றவர்களை பார்த்தே இந்த பழக்கத்தை பார்த்து கற்று கொள்வார்கள். அதனால் மதிக்க கற்றுத்தருவது அவசியமாகும்.

2. நேர்மை:

நேர்மையான வழியில் செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக கற்று தர வேண்டும்.

3. குட் டச், பேட் டச்:

பெண் குழந்தைகளாக இருந்தாலும், சரி ஆண் குழந்தைகளாக இருந்தாலும் சரி உடலை மற்றவர்கள் தொடுவதை விவரித்து கற்றுகொடுப்பது அவசியமாகும். குட் டச் எது பேட் டச் எது என ஆராய்ந்து கொண்டால் அவர்கள் சில சிக்கல்களில் இருந்து தப்பிக்க நேரிடும்.

4. உணர்ச்சிகள்:

உணர்ச்சிகள் குறித்து கற்று தருவது அவசியமாகும். மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து நடப்பது எப்படி என்பதை சொல்லி கொடுத்தால் வளர்ந்த பிறகு வாழ்க்கையை எளிதாக வாழ பழகி கொள்வார்கள்.

5. பணத்தின் அருமை:

பணம் வாழ்க்கைக்கு அவசியமானதாகும். அதனால் அதை எப்படி செலவழிப்பது, எது அத்தியாவசியம் என்பது பற்றி தெளிவு கொடுக்க வேண்டும். மேலும் கஷ்டத்தை சொல்லி வளர்க்கும் போது, பணத்தின் அருமை குழந்தைகளுக்கு நிச்சயம் புரியும்.

6. வீட்டு வேலை:

வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல் அவசியமாகும். என்ன வேலைகளாக இருந்தாலும் சரி, நீயும் செய்ய வேண்டும் என சொல்ல வேண்டும். இதன் மூலம் தங்கள் பணிகளை அவர்களாகவே செய்யும் பக்குவத்தை தயார் செய்து கொள்வார்கள்.

7. சந்தேகங்களுக்கு தீர்வு:

பொதுவாகவே இந்த காலத்து குழந்தைகள் அதிகம் கேள்வி கேட்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் கூட சந்தேகம் உள்ளதை கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள். தயக்கமின்றி பெற்றோருடன் பேசி சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொண்டால் அவர்கள் மனதில் எந்த குழப்பமும் இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com