ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மிக சாதாரணமான பொருள் நகவெட்டி. ஆனால் நகங்களை வெட்டுவதற்கு மட்டுமே நாம் இதை பயன்படுத்துகிறோம். அதன் வடிவமைப்பு மற்றும் அதில் உள்ள சில சிறிய பாகங்கள் பல அவசரகாலத் தேவைகளுக்கு பயன்படுகின்றன என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நகவெட்டியின் வியக்கத்தக்க பயன்கள் மற்றும் அவற்றின் பாகங்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அதை வாங்குங்கள்!
நகங்களை சீரமைத்தல்: நகவெட்டியின் முதன்மையான பயன்பாடு நகங்களை வெட்டுவதாகும். இதில் உள்ள வளைந்த கத்திகள் நகத்தின் இயற்கை வடிவத்திற்கு ஏற்பட்ட வெட்ட உதவுகின்றன. நகவெட்டியில் இணைக்கப்பட்டுள்ள ஃபைலர் எனப்படும் சிறிய கரடு முரடான பகுதி நகங்களை வெட்டிய பிறகு கூர்மையான ஓரங்களை மழுங்க செய்ய உதவுகிறது. இதனால் நகங்கள் உடைகளில் அல்லது நமது தோலில் சிக்கி காயம் ஏற்படாமல் தடுக்கிறது.
கம்பி மற்றும் மெல்லிய உலோகங்களை வளைத்தல்: நக வெட்டியின் கைப்பிடிப் பகுதியில் பெரும்பாலும் ஒரு சிறிய துளை இருக்கும். இது அலங்காரத்திற்காக வைக்கப்படுவது அல்ல. ஒரு மெல்லிய கம்பியை அல்லது சிறிய இரும்புத்துண்டை வளைக்க வேண்டி இருக்கும் போது அந்த துளையினுள் கம்பியை விட்டு அழுத்தம் கொடுத்தால் கைகளுக்கு வலி ஏற்படாமல் மிகத் துல்லியமாக அதை வளைக்க முடியும்.
தாமிரக் கம்பிகளை சீவ:
மின்சார சம்பந்தமான வேலைகளின் போது கத்திரிக்கோலை பயன்படுத்தாமல் நகவெட்டியை உபயோகிக்கலாம். பிளாஸ்டிக் உறை கொண்ட தாமிரக் கம்பிகளை சீவ வேண்டிய தேவை ஏற்படும்போது நகவெட்டியின் கத்தி போன்ற பகுதிக்கிடையே கம்பியை வைத்து லேசாக அழுத்தி இழுத்தால் உள்ளே இருக்கும் தாமிரக் கம்பி சேதம் அடையாமல் பிளாஸ்டிக் உறை மட்டும் தனியாக வரும்.
ஸ்குரு டிரைவராக பயன்படுதல்:
நகவெட்டியில் இருக்கும் சிறிய கத்தி போன்ற பகுதி கிளீனர். இது நுனியில் தட்டையாக இருக்கும் கடிகாரங்கள் ,பொம்மைகள் அல்லது சிறிய மின்னணு சாதனங்களில் உள்ள ஸ்குரூக்களை கழற்ற அவசரத்திற்கு இதை உபயோகப்படுத்தலாம். ஸ்க்ரு டிரைவர் இல்லாமலேயே நகவெட்டியின் முனை பயன்படுகிறது.
பிளாஸ்டிக் டேப்புகளை எளிதாக கிழிக்க:
ஆன்லைன் மூலம் வரும் பார்சல் அல்லது நன்றாக ஓட்டப்பட்ட பிளாஸ்டிக் உறைகளை திறக்க கத்தியை தேட வேண்டிய அவசியம் இல்லை. நகவெட்டியின் கூர்மையான நுனியால் பிளாஸ்டிக் டேப்புகளை எளிதாக கிழித்து பொட்டலங்களை திறக்க உதவும்.
ஸ்டேப்ளர் பின்களை அகற்ற;
உணவுப் பொருள்கள் அல்லது கொரியர் பார்சலில் வரும் தபால் உறைகளில் ஸ்டேப்ளர் பின்கள் இருக்கும். இவற்றை விரல் நுனிகளால் அகற்ற முயலும்போது காயம் ஏற்படும். நகவெட்டியின் முனையை ஸ்டேப்ளர் பின்னுக்கு அடியில் விட்டு மெதுவாக தூக்கினால் காகிதம் கிழியாமலும் கையில் காயம் ஏற்படாமலும் பின்களை எளிதாக நீக்கலாம்.
வெட்டிய நகங்களை சேகரிக்க:
நகங்கள் வெட்டும்போது அவை சிதறாமல் இருக்க நகவெட்டிகளின் இரண்டு பக்கங்களிலும் சிறிய செலொஃபன் டேப் ஒட்டி பயன்படுத்தினால் நகங்களை ஓரிடத்தில் சேமிக்கலாம்.
சேஃப்டி லாக்:
சில நகவெட்டிகளில் சேஃப்டி லாக் இருக்கும். அதை பயன்படுத்தி அதை லாக் செய்துகொள்ளலாம். குழந்தைகள் தவறுதலாக அதை எடுத்து காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம். நகவெட்டி என்பது நகங்களை வெட்டுவதற்கு மட்டுமல்ல, ஒரு மல்டி டூல் கருவியாக நம் தினசரி பயன்பாடுகளுக்கான சிறப்பு உபகரணங்களாக பயன்படுத்தலாம்.
அதை பற்றி தெரிந்து கொண்டீர்களா? இப்பொழுது கட்டாயம் தேவைப்படும்! உடனே வாங்க...