பேங்க் பேலன்ஸை விட உங்க குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய 8 உண்மையான சொத்துக்கள் இதோ!

Parent Children
Parent Children
Published on

பெற்றோர்களாகிய நாம் அனைவரும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஓயாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்குப் பெரிய வீடோ அல்லது கணிசமான வங்கி இருப்போ சேர்த்து வைத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என்று பலரும் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் வெறும் பணமும் காசும் மட்டுமே அவர்களைக் காப்பாற்றிவிடாது. 

உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், நமது பிள்ளைகளுக்கு நாம் சேர்க்க வேண்டிய உண்மையான சொத்துக்கள் வேறு சில இருக்கின்றன. அவர்கள் சுயமாகவும் தைரியமாகவும் இந்த சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழத் தேவையான 8 மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பிள்ளைகளுக்குச் சேர்க்க வேண்டிய 8 விலைமதிப்பற்ற சொத்துக்கள்!

1. வாழ்க்கை எப்போதுமே சீராக இருக்காது, பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும். அந்த மாதிரி நெருக்கடியான நேரங்களில் எதற்கும் உடைந்து போகாமல், எந்த ஒரு பெரிய சவாலையும் நெஞ்சழுத்தத்தோடு எதிர்கொள்ளும் அபாரமான மன வலிமையை அவர்களுக்கு சிறு வயதிலேயே பழக்க வேண்டும்.

2. வெறுமனே பாக்கெட் மணி கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், காசின் அருமையை அவர்களுக்கு முழுமையாக உணர்த்த வேண்டும். ஒரு ரூபாயை எப்படி நேர்மையாக ஈட்டுவது, அதை எப்படிச் சிக்கனமாகச் செலவழிப்பது மற்றும் எதிர்காலத்திற்காக எப்படிப் பெருக்குவது போன்ற அடிப்படை நிதி நிர்வாகத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம்.

3. இன்றைய பாஸ்ட் புட் மோகத்தில் சிக்காமல், சத்தான வீட்டு உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குவது மிகப்பெரிய சொத்தாகும். சுவையான அதே சமயம் உடலுக்குக் கேடு விளைவிக்காத ஆரோக்கியமான உணவு முறைகளைத் தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை அவர்களுக்கு நாம் கற்றுத்தர வேண்டும்.

4. எத்தனை சமூக வலைத்தளங்கள் இருந்தாலும், நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது ஓடி வரும் நிஜமான மனிதர்கள்தான் வாழ்க்கைக்குத் தேவை. நல்ல எண்ணங்கள் கொண்ட, உண்மையான நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுத்து அவர்களோடு உறவாடுவது என்பதைப் பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

5. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் பெற்றோரையோ அல்லது மற்றவர்களையோ சார்ந்திருக்காமல், சூழ்நிலையை அலசி ஆராய்ந்து தாங்களாகவே ஒரு முடிவை எடுக்கும் திறனை அவர்களிடம் வளர்க்க வேண்டியது மிக அவசியமாகும்.

இதையும் படியுங்கள்:
ஆண்டு சம்பளம் கோடிக்கணக்கில்! யாருக்கு?
Parent Children

6. ஒரு காரியத்தில் சறுக்கல் ஏற்பட்டால் அதுவே உலகின் முடிவு என்று முடங்கிக்கிடக்கக் கூடாது. அந்தத் தடையை ஒரு நல்ல பாடமாக எடுத்துக்கொண்டு, முன்பை விட அதிக வீரியத்தோடு மீண்டும் எழுந்து வரும் விடாமுயற்சியை அவர்கள் மனதில் விதைக்கவேண்டும்.

7. தான் நினைக்கும் ஒரு கருத்தை அல்லது தனக்கு நேர்ந்த ஒரு அநீதியை எந்த இடத்திலும் யாருக்காகவும் தயங்காமல், மிகத் தெளிவாகவும் துணிச்சலாகவும் எடுத்துரைக்கும் ஆற்றலை பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

8. தன்னைச் சுற்றி வாழும் சக மனிதர்கள் மீது இரக்கமும் பரிவும் காட்டுவதோடு மட்டுமில்லாமல், நாம் வாழும் இந்த இயற்கையையும் மரங்களையும் எந்த அளவுக்கு நேசிக்க வேண்டும் என்ற உயரிய குணத்தை அவர்களுக்குள் ஆழமாகப் பதிய வைக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோடிக்கணக்கில் முடக்கப்படும் WhatsApp கணக்குகள்... என்ன காரணம்? 
Parent Children

கோடிக்கணக்கில் பணத்தைச் சேர்த்து வைப்பதை விட, மேலே சொன்ன இந்த எட்டு குணங்களையும் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதுதான் நீங்கள் அவர்களுக்குச் செய்யும் மாபெரும் உதவியாகும். இந்தப் பண்புகள் அவர்களிடம் ஆழமாக வேரூன்றிவிட்டால், அவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தங்களைத் தாங்களே காத்துக்கொண்டு ஒரு சிறந்த மனிதர்களாக ஜொலிப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com