குழந்தைகளை அட்ராக்ட் செய்யும் 8 வழிகள்!

8 Ways to Attract Kids
8 Ways to Attract Kidshttps://www.growingup.lk

குழந்தைகளை வசப்படுத்துவது என்பது ஒரு கலை. ஒருசிலரிடம் குழந்தைகள் தானாக சென்று ஒட்டிக்கொள்ளும். வேறு சிலரிடம் நகர்ந்து சென்றுவிடும். குழந்தைகளைக் கவர இந்த 8 வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

1. அணைத்தல்: அன்பான அணைப்பு, ‘நான் இருக்கிறேன்’ என்ற பாதுகாப்பு உணர்வைத் தரும் உடல் மொழி. குழந்தைகளை அவ்வப்போது மகிழ்வுடன் அணைத்து மகிழ்வித்தால் நம்மைத் தேடி ஓடி வருவார்கள்.

2. பேசுதல்: நமக்கு நேரமில்லை என்பது குழந்தைகளுக்குத் தெரியாது. குழந்தைகள் நம்மிடம் நிறைய பேச வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட்டை ஆர்வத்துடன் அவர்களிடம் பேசுங்கள் உங்களை அவர்களுக்குப் பிடித்துப்போகும்.

3. உடன் விளையாடுதல்: குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது அவர்களுக்கு நம்மை நட்பாக உணரச் செய்யும். நண்பராக நினைக்கும்போது எளிதாக அவர்களால் நம்முடன் நெருங்க முடியும்.  

4. கேள்விக்கு பதில் சொல்லுதல்: குழந்தைகள் கேட்கும் கேள்விகளை புறம் தள்ளாமல் அவர்களுக்கு உடனடியாக பதில் சொல்லுங்கள். அவர்களை மதித்து அவர்களின் பேசுக்கு நாம் மரியாதை செய்கிறோம் எனும் பெருமிதமே நம்மை அவர்களை நேசிக்க வைக்கும்.

5. பாராட்டுதல்: அவர்கள் செய்யும் செயல்கள் நமக்கு சிறியதாகத் தோன்றும். ஆனால், அது அவர்களுக்குப் புதியது மட்டுமல்லாமல் பெரியதும் என்பதால் ஒவ்வொரு முறையும் அவர்கள் செய்யும் சிறு சிறு செயல்களைப் பாராட்டுங்கள். அந்த பாராட்டுக்கள் உங்களுக்கு அவர்களின் முத்தமாக உங்களுக்குக் கிடைக்கும்.

6. சிறுசிறு பரிசளித்தல்: நல்ல பண்புகளை அல்லது செயல்களை அவர்கள் மற்றவரிடம் வெளிப்படுத்தும்போது அவர்களே எதிர்பாராமல் சிறு சிறு பரிசுகளை அவர்களுக்குத் தாருங்கள். பரிசுகள் பெற்ற உற்சாகத்துடன் உங்களிடம் அவர்கள் பாசத்தைப் பொழிவார்கள்.

இதையும் படியுங்கள்:
தீராத பசியுணர்வைப் போக்கும் தீர்வுகள் 9!
8 Ways to Attract Kids

7. வெளியே அழைத்துச் செல்லுதல்: குழந்தைகள் வீட்டில் அடைந்து கிடக்காமல், அடிக்கடி அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளி உலகத்தைக் காட்டுங்கள். நேரமும் பயனுள்ளதாகும். குழந்தைகளும் குதூகலமாவார்கள்.

8. விரும்பிய உணவை அளித்தல்: குழந்தைகள் எப்போதும் ருசியான, அவர்களுக்குப் பிடித்த உணவுகளையே விரும்புவார்கள். அதைக் கண்டிப்புடன் விலக்காமல், ‘இன்று மட்டும்’ போன்ற விதிமுறைகளுடன் வாங்கித் தந்து அவர்களை குஷிப்படுத்தி அட்ராக்ட் செய்து அசத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com