கணவன் மனைவியை நேசிக்க வைக்கும் 9 விஷயங்கள்!

happy husband and wife
மகிழ்ச்சியான கணவன் மனைவிhttps://tamil.boldsky.com
Published on

காதலில் பரஸ்பரம் இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்வது அவசியமானது மட்டுமல்ல, காதலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இது அன்பான கணவன் மனைவிக்கும் கூட பொருந்தும். கணவனோ அல்லது காதலனோ, தனது மனைவி அல்லது காதலியிடம் எதிர்பார்க்கும் 9 விஷயங்கள் எவை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. கணவர் நன்றாக உடை அணிந்து இருக்கும்போது அவரை மனதாரப் பாராட்ட வேண்டும். செல்லப் பெயர் வைத்து கணவனை அழைத்தால் மிகவும் மனம் மகிழ்வார். உங்களுடன் இன்னும் நெருக்கம் கூடும்.

2. உணவு பரிமாறும்போது முகத்தில் புன்னகையுடன் பரிமாறலாம். அவர் போன் பார்த்துக் கொண்டிருந்தால் மென்மையாக அதை வாங்கி வைத்துவிட்டு உங்களுடன் உரையாடும்படி செய்யலாம். அவ்வப்போது அவரை சீண்டி கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்.

3. 'சாம்பார் நல்லா இருக்கா? வீட்டுக்கு அந்தப் பொருள் வாங்கணும், இது வாங்கணும்’ என்பது போன்ற உப்பு சப்பில்லாத விஷயங்களைப் பற்றி கணவனிடம் பேசுவதை விட்டுவிட்டு, இனிமையான விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்.

4. அரசியல், பொருளாதாரம், கிரிக்கெட் மற்றும் உலக விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவருடன் அதைப் பற்றி விவாதம் செய்யும்போது மிகவும் ரசிக்கக்கூடும். என் மனைவிக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது என்கிற லேசான கர்வமும் அவருக்கு வரலாம்.

5. பொது இடங்களிலும் உறவினர்களிடமும் அவரைப் பற்றி உயர்வாகப் பேச வேண்டும். அதேசமயம் அவர் மனம் சோர்ந்திருக்கும்போது தனிமையில் அவரை நன்றாக உற்சாகப்படுத்தலாம், ஊக்கப்படுத்தலாம்.

6. அவருடைய பொருளாதாரம் எப்படி இருந்தாலும் பிள்ளைகள் அவரைப் பற்றி உயர்வாக பேசும்படி குழந்தைகளைத் தூண்ட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் 6 அற்புதப் பழங்கள்! 
happy husband and wife

7. அவருடைய பிறந்த நாள் மற்றும் திருமண நாளை ஞாபகம் வைத்துக் கொண்டு அவருக்கான உடைகள் மற்றும் பரிசுகள் வாங்கித் தரலாம்.

8. நீங்கள் அவரை மனதார விரும்புகிறீர்கள் என்பதை அடிக்கடி சொல்ல வேண்டும். இது அவர்களுக்குத் தனிப்பட்ட சந்தோஷத்தை கொடுக்கும்.

9. அவருக்குத் தேவையான, பிடித்த சமையலை அவர் கேட்காமலே செய்து தரலாம். அவருக்காக மனதார பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com