அச்சச்சோ... தொல்லை தாங்கலையே! கரப்பான் பூச்சிகள் காணாமல் போக 9 குறிப்பகள்!

Cockroach
Cockroach
Published on

தினமும் சமையலறையில் சுத்தம் செய்தாலும் கரப்பான் பூச்சிகள் வருவதை தடுக்கமுடியவில்லையே என்ற கவலை யாருக்குத்தான் இல்லை? கரப்பான் பூச்சிகள் அலமாரிகளிலும் மூலை முடுக்குகளிலும் வசிப்பதோடு அது இனப்பெருக்கமும் செய்யலாம். இது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவித்து பல நோய்களை உண்டாக்கவும் செய்யும். அதனால் சரியான முறையில் சுத்தம் செய்வதோடு அதை வராமல் தடுக்கவும் என்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

மண்ணெண்ணெய்: மண்ணெண்ணெய் பயன்படுத்தினால் அடுத்த அரை மணி நேரத்தில் எல்லா கரப்பான் பூச்சிகளும் ஓடிவிடும். இதற்கு ஸ்ப்ரே பாட்டிலில் மண்ணெண்ணெய்யை நிரப்பி கரப்பான் பூச்சிகள் அதிகம் காணப்படும் இடங்களில் தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் அதன் வாசனை தாங்கமுடியாமல் ஓடிவிடும்.

பலா இலை பொடி: கரப்பான் பூச்சிகளை விரட்ட பலா இலை பொடியையும் பயன்படுத்தலாம். இதற்கு இலையை நைசாக அரைக்கவும். இதற்குப் பிறகு இந்தப் பொடியை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிறிது சிறிதாகத் தூவவும்.

பெப்பர்மின்ட் ஆயில்: கரப்பான் பூச்சிகளை விரட்ட பெப்பர்மின்ட் ஆயிலையும் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை கிளாஸ் பெப்பர்மின்ட் எண்ணெயை கலக்கவும். பின் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீட்டில் தெளிக்கவும்.

கிராம்பு: வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட கிராம்புகளைப் பயன்படுத்தலாம். இதற்கு 12-15 கிராம்புகளைத் தூள் செய்து கரப்பான் பூச்சிகள் இருக்கும் இடங்களில் வைக்கவும். கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்தும் தெளிக்கலாம்.

எலுமிச்சை: எலுமிச்சையின் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே, எலுமிச்சை சாற்றை கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தெளிக்க, அவை ஓடிவிடும்.

பூண்டு: பூண்டின் நெடி கராப்பான் பூச்சிகளை ஒரு நொடிகூட தங்க விடாது. எனவே, பூண்டை இடித்து கரப்பான் பூச்சி வரும் இடத்தில் போடுங்கள். இல்லையெனில் பூண்டை அரைத்து தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
இன்டீரியர் டிசைனில் பயன்படுத்தப்படும் முக்கியமான 5 Elements என்னென்ன தெரியுமா?
Cockroach

வேம்பு: வேப்ப எண்ணெய் மற்றும் பொடியில் கரப்பான் பூச்சிகளைக் கொல்லக்கூடிய பொருட்கள் உள்ளன. ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு வேப்ப எண்ணெயை தண்ணீருடன் சேர்த்து, இந்த பூச்சிகளை பார்த்த இடங்களில் தெளிக்கவும். வேப்பம்பூ பொடியை, கரப்பான் பூச்சி உள்ள பகுதிகளில் இரவில் தெளித்துவிடவும். காலையில் கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும். ஒரு கைப்பிடி வேப்ப இலைகள் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி அரைத்து பேஸ்ட்டை உருவாக்கவும். தண்ணீரை வடிகட்டி, திரவத்தை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு மாற்றவும். இரவில், பாதிக்கப்பட்ட பகுதிகள் மீது தெளிக்க, சிறிய கரப்பான் பூச்சிகளையும் அகற்றி விடலாம்

மிளகுக்கீரை எண்ணெய்: கரப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் சக்திவாய்ந்த அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று மிளகுக்கீரை எண்ணெய். வீட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடல் நீர் மற்றும் மிளகுக்கீரை எண்ணெய் கலந்து தெளிக்கவும். கரப்பான் பூச்சிகள் இறந்துவிடும்.

பிரியாணி இலை: அன்றாடம் சமைக்கும் உணவில் வாசனைக்காகவும், மசாலாவிற்காகவும் சேர்க்கப்படும் இந்த இலைகள் கரப்பான் பூச்சியை ஒழிக்கும் என்று கூறும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? சில பிரியாணி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை ஒரு ஸ்பிரே பாட்டில் மூலம் கரப்பான் பூச்சியைக் காணும் இடங்களில் ஸ்பிரே செய்தால் கரப்பான் பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். இது மிகச்சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் கரப்பான் பூச்சிகள் அழிந்து விடும்.

இந்த முறைகளை பயன்படுத்தி கரப்பான் பூச்சியை கூண்டோடு அளித்து நலமுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com