குடும்பத்தின் நடுக் குழந்தையின் 9 தனித்துவமான குணங்கள்!

9 unique qualities of the middle child of the family!
9 unique qualities of the middle child of the family!https://www.parents.com

பொதுவாக, ஒரு குடும்பத்தில் பிறக்கும் மூத்த குழந்தைக்கு நிறைய சலுகைகளும் பெற்றோரின் அபரிமிதமான அன்பும் பிரியமும் கிடைக்கும். அதேபோல, கடைசிக் குழந்தையும் பெற்றோரின் செல்லத்துக்கும் பிரியத்துக்கும் உரியதாக, ஏகப்பட்ட சலுகைகள் பெற்று விளங்கும். மூத்தக் குழந்தைக்கும் கடைசிக் குழந்தைக்கும் இடையில் பிறக்கும் நடுக் குழந்தைக்கு (Middlechild) அத்தனை அன்பும் பிரியமும் கிடைக்காது. அத்தனை அக்கறையாக அதைப் பார்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி நடுக்குழந்தையாகப் பிறப்பவர்களின் 9 தனித்துவமான குணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஒரு குடும்பத்தின் நடுக் குழந்தை பிரியத்திற்கும் அன்பிற்கும் எப்போதுமே ஏங்கும். எப்போதுமே பிறர் சொல்வதற்கு இணங்கிப் போகும் மனம் உள்ளதாக விளங்கும். மூத்த குழந்தை உபயோகப்படுத்திய துணிமணிகள், பொம்மைகள் மட்டுமே அதற்குக் கிடைக்கும்.

2. யாரையும் சாராமல் அந்தக் குழந்தை தனித்தியங்கும் திறமை பெற்று விளங்கும். குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அதனால் சுதந்திரமாக இயங்கக்கூடிய சக்தி அதற்கு வந்துவிடும்.

3. வீட்டில் எப்போதும், ‘மூத்த பிள்ளையை பார்த்து கற்றுக்கொள்’ என்று அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதே சமயம், ‘இளைய பிள்ளைக்கு விட்டுக்கொடு’ என்று வற்புறுத்துவார்கள். அதனால் விட்டுக்கொடுத்தும், அடிபணிந்தும் வாழ்வார்கள்.

4. சில வீடுகளில் நடுத்தரக் குழந்தை புரட்சிகரமாக இருக்கும். அதேசமயம் சண்டை சச்சரவுகளில் புத்திசாலித்தனமாக நிலைமையைக் கையாளும் திறமையும் நிதானமும் அதற்கு இருக்கும்.

5. விரைவில் சமாதானம் அடையும் இயல்பு இயற்கையாகவே அதற்கு இருக்கும். ஆனால், இவர்களின் விருப்பத்திற்கு வீட்டில் மரியாதை குறைவாகவே இருக்கும்.

6. தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் தன்னிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை எதிர்பார்க்கும். வீட்டில் தேவையான அளவு அன்பு கிடைக்காதபோது வெளியில் அதைத் தேட முயல்வார்கள். பிரியமாகப் பேசும் மனிதர்களிடம் மிகவும் ஒட்டுதலாக இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
மூளைக் கட்டி வராமல் தடுக்க உண்ண வேண்டிய எட்டு சூப்பர் உணவுகள்!
9 unique qualities of the middle child of the family!

7. இவர்களை நண்பர்களாக அடைந்தவர்கள் பாக்கியசாலிகள். உண்மையான அன்பு செலுத்துவார்கள். அதேபோல, வாழ்க்கைத் துணையாக அடைந்தவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தம்பதிகளுக்குள் நல்ல பிரியத்தை செலுத்துபவர்களாக இருப்பார்கள். தனது துணையிடம் மிகுந்த உண்மைத்தன்மையுடன் விளங்குவார்கள்.

8. ‘நான்’ என்ற ஈகோ இவர்களிடம் அவ்வளவாக இருக்காது. அனைவரையும் அனுசரித்துச் செல்வார்கள். விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். திறந்த மனதுடன் இருப்பார்கள். அதனால் வெளியில் உள்ளவர்களுக்குப் பிடித்த மனிதர்களாக இருப்பார்கள்.

9. நல்ல பக்குவமான தன்மையுடன் நடந்து கொண்டாலும் வீட்டில் புறக்கணிக்கப்பட்ட அந்த வலி எப்போதும் இருக்கும். மனதில் இருக்கும் அந்த உள் மனக்குழந்தை எப்போதும் ஏக்கத்திலேயே இருக்கும்.

மனது சரியில்லாதபோது பழைய காயங்கள் இவர்களை வாட்டி வதைக்கும். ஆனாலும், குடும்பத்தினரை விட பிறர் இவர்கள் மேல் மிகுந்த அன்பையும் பிரியத்தையும் செலுத்துவார்கள் என்பது ஆறுதலான விஷயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com