மழைக்காலத்தில் வீட்டை பராமரிக்கும் 9 வழிமுறைகள்!

Raining season maintenance
Raining season maintenance
Published on

ழைக்காலம் என்றாலே வேலைக்கு வெளியே செல்பவர்களுக்கு ஒருவித கஷ்டம் என்றால், வீட்டைப் பராமரிப்பதில் பெண்களுக்கு பலவித கஷ்டங்கள் ஏற்படுகிறது. இதில் துணியை உலர்த்துவது தொடங்கி, மரச் சாமான்கள், மளிகை சாமான்களை பாதுகாப்பது வரை எளிய வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. மெழுகுவர்த்திகள்: பெரும்பாலானவர் வீட்டிலும் இன்வெர்ட்டர் இருந்தாலும் மழைக்காலத்தில் அடிக்கடி மின்வெட்டுகளை சந்திக்க நேரும்போது அது பயனளிக்காத சமயங்களில் மெழுகுவர்த்தியை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த அது நீடித்து உழைக்கும். மெழுகுவர்த்தியை பயன்படுத்தும்பொழுது பழைய பாத்திரங்கள், அட்டைகள் மீது வைத்தால் உருகி வடியும் மெழுகு தரையில் படாமல் இருப்பதோடு, மெழுகுவர்த்தியை தேவையான இடத்திற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

2. உப்பு: மழைக்காலத்தில் உப்பு நீர் விட்டு பிசுபிசு தன்மையாக மாறி விட வாய்ப்பு இருப்பதால் நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய அரிசியை சிறிதளவில் எடுத்து உப்பு டப்பாவில் போட்டு வைத்தால்  அரிசி உப்பில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

3. பருப்பு: மழைக்காலத்தில் பருப்புகளை சிறிதளவு நெருப்பில் வறுத்தெடுத்து ஆறிய பின்பு டப்பாக்களில் அடைத்து வைக்க வண்டுகள் வராது . கூடுதலாக அந்த டப்பாவில் பிரியாணி இலை மற்றும் சுக்கு ஆகியவற்றை போட்டு வைத்தால் பூச்சி வராமல் இருப்பதோடு பருப்பு கெட்டுப் போகாமலும் இருக்கும்.

4. அரிசி: மழைக்காலத்தில் அரிசியில் வண்டு வராமல் இருப்பதற்கு அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் இரண்டு காய்ந்த மிளகாய் வேப்பிலை போட்டு வைக்க  வண்டுகள் சேராது.

5. மரக்கதவுகள்: மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மழை பெய்து தண்ணீர் தேங்கி பாதிக்கப்படாமல் இருக்க அரிசி சாக்கினை கதவின் கால்வாசி அளவிற்கு ஒட்டி வைத்தால் மழை நீர் அதில் படாமல் மரக்கதவுகள் பாதுகாக்கப்படும்.

6. துணிகள் மணமணக்க: மழைக்காலத்தில் பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் துணிகளில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்ச, ஒரு சின்ன துணியில் கைப்பிடி அளவு அரிசி மற்றும் ஜவ்வாது பொடியை கலந்து இறுகக் கட்டி பீரோவில் வைக்க துணிகளில் உள்ள வாடை நீங்குவதோடு ஈரப்பதத்தையும் உறிஞ்சுகிறது.

இதையும் படியுங்கள்:
கனடிய நன்றி செலுத்தும் நாளின் வரலாறு மற்றும் கலாசாரம் பற்றி தெரியுமா?
Raining season maintenance

7. கொசுக்களை விரட்ட: மழைக்கால கொசுக்களை விரட்ட மாலை நேரங்களில் அகல் விளக்கில் வேப்பெண்ணையை ஊற்றி தீபம் ஏற்றினாலும், எப்பொழுதும் பயன்படுத்தக்கூடிய எண்ணெயில் கற்பூரத்தை உடைத்துப் போட்டாலும் கொசுக்கள் வராது.

8. பூஞ்சைகளில் இருந்து பாதுகாக்க: மழைக்காலங்களில் பாய்களை சுருட்டி வைக்கும்போது அதில் செய்தித்தாளை பாய் முழுவதும் வைத்து சுற்றினால் பூஞ்சைகள் வைக்காது.

9. வெளியில் செல்லும்போது: வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை, ஒரு பாலிதீன் கவர், ஜிப் லாக் கவர் மற்றும் ஒரு துணியை எப்பொழுதும் பையில் வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் பொருட்களையும் உங்களையும் பாதுகாக்கப் பயன்படும்.

மழைக்காலம் முடியும் வரை மேற்சொன்ன வழிமுறைகளை கையாண்டாலே மழையின் பாதிப்பிலிருந்து பெரும்பாலும் தப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com