ரூ. 9000/- விலையில் ஒரு பழம்... அடேங்கப்பா... அது என்ன பழம்?

மும்பை பர... பர...!
ரூ. 9000/- விலையில் ஒரு பழம்... அடேங்கப்பா... அது என்ன பழம்?

மாம்பழம்தான். மும்பையில் மாம்பழ சீசன் வழக்கமாக ஜனவரி மாத இறுதியில்தான் ஆரம்பமாகும். ஆனால், இவ்வருடம் மிகவும் முன்கூட்டியே தேவ்காட், மாலவி அல்போன்சா மாம்பழங்கள் சந்தைக்கு வந்துவிட்டதாக (Vashi) வாஷி ஏபிஎம்சி சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து கர்நாடகா மாம்பழங்களும் வந்துவிட்டனவாம்! இவை கிலோ ` 300/- முதல் 500/-' வரை விற்கப்படுகின்றன.

இதற்கிடையே, கல்யாண் கிராமத்திலுள்ள பிரசாந்த் ஷிண்டே என்பவரின் தோட்டத்திலிருந்து தேவ்காட் அல்போன்ஸா மாம்பழங்களும் வந்திருக்கின்றன. 2 டஜன் மாம்பழ விலை ` 9,000/- மட்டுமே

மும்பை மாம்பழம் பர...பர...!

*******************************************

புதிய வேத வியாஸ உலகளாவிய பள்ளி’

மும்பை வடாலா பகுதியிலிருக்கும் ஸெளத் இந்தியன் ஸ்கூல் மற்றும் கல்லூரி அமைப்பு கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பெரிய நூலகம், பரிசோதனைக் கூடம்; விளையாட்டு மைதானம், இவைகளுடன் நுண்கலைகள் வளர்ப்பும் இங்கே உள்ளன.

வரும் 2023 – 2024 அகாடமி வருடத்தில் கேஜி(KG) முதல் 10ஆம் வகுப்பு வரை ICSE போர்டுடன் இணைந்து வேத வியாஸ உலகளாவிய பள்ளி ஆரம்பிக்கப்பட உள்ளது. தற்சமயம், நர்ஸரி, ஜூனியர் மற்றும் சீனியர் கேஜிகளுக்கு அட்மிஷன் தொடங்கி இருக்கின்றன.

இந்த புதிய திட்டத்தின் மூலம் குழந்தைகளின் பகுப்பாய்வு (analytical), புதுமையாக யோசிக்கும் திறன் போன்றவைகள் மேம்படுத்தப்படும். படிப்புடன் விளையாட்டு, இதர கலைகள் ஆகியவைகளுக்கும் இடமுண்டு.

ஒவ்வொரு குழந்தையையும் தனிப்பட்ட முறையில் கவனித்து, அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு
15:1 விகிதத்தில் ஆசிரியர்கள் செயலாற்றுவார்கள். இத்தகைய பள்ளியில் சேர்ந்து படிக்க ஆசைப்படு! முன்னேறு! பலனை அடை! என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com