கேஸ் பர்னர் அழுக்கை எளிதாக நீக்க ஒரு அசத்தல் டிப்ஸ்!

Gas Burner
Gas Burner
Published on

சமையலறையில் கேஸ் ஸ்டவ் மேல்பரப்பைத் தினமும் சுத்தம் செய்வது நம் வழக்கம். கண்ணுக்குத் தெரியும் அழுக்குகளை உடனே நீக்கிவிடுவோம். ஆனால், அடுப்பின் முக்கியமான பகுதியான பர்னர்களைப் பலர் முறையாகச் சுத்தம் செய்வதில்லை. சமைக்கும்போது சிந்தும் உணவுத் துணுக்குகள், எண்ணெய் பிசுக்கு போன்றவை பர்னர்களில் படிந்து நாளடைவில் காய்ந்து கெட்டியான கறைகளாக மாறிவிடும். இது பல பிரச்சனைகளை உருவாக்கும்.

பர்னர்களைச் சுத்தம் செய்வது ஏன் முக்கியம்? 

இதில் சேரும் அழுக்குகள் வாயு வெளிவரும் சிறிய துளைகளை அடைத்துவிடும். இதனால் கேஸ் சீராக வராமல், எரிப்பு சீரற்றதாகி கேஸ் விரயமாவதுடன், பாத்திரங்களின் அடியும் சீக்கிரம் கரிப்பிடித்துக் கருப்பாக மாறிவிடும். எனவே, பர்னர்களைச் சுத்தமாக வைத்திருப்பது எரிவாயுவைச் சிக்கனப்படுத்தவும், பாத்திரங்களைப் பாதுகாக்கவும், சீரான தீச்சுடரைப் பெறவும் உதவும்.

இந்தக் காய்ந்த அழுக்குகளை நீக்குவது கடினம் என்று நினைத்து பலர் இதைத் தவிர்ப்பார்கள். ஆனால், ஒரு சுலபமான வீட்டுக்குறிப்பைப் பயன்படுத்தி இந்த அழுக்குகளை மிக எளிதாக நீக்கலாம். அதற்குத் தேவையான பொருட்கள் கொதிநீர், எலுமிச்சைப் பழம் மற்றும் ஈனோ (ENO).

இந்த முறையைப் பின்பற்ற, முதலில் உங்கள் கேஸ் பர்னர்களை அடுப்பிலிருந்து கவனமாக எடுத்து விடுங்கள். சற்று ஆழமான ஒரு பாத்திரத்தையோ அல்லது தட்டையோ எடுத்து, அதில் பர்னர்களைப் போட்டு, அவை முழுமையாக மூழ்கும் அளவுக்கு நன்றாகக் கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றவும். இப்போது, அந்த வெந்நீரில் ஒரு முழு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைப் பிழிந்து விடுங்கள். அத்துடன், இரண்டு பாக்கெட் ஈனோ (ENO) சேர்த்துக் கலக்கவும்.

இந்த கலவையில் பர்னர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அப்படியே ஊறட்டும். ஈனோ மற்றும் எலுமிச்சையின் அமிலத்தன்மை காய்ந்த பிசுபிசுப்பு அழுக்குகளை மெதுவாக இளகச் செய்யும். நேரம் கழித்துப் பார்த்தால், பர்னர்களின் மேற்பரப்பில் உள்ள அழுக்குகள் ஓரளவு இளகியிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
கொழுப்பு அதிகமா போச்சா? தக்காளி சாறு குடிச்சா போச்சு!
Gas Burner

பிறகு, நாம் சாறு பிழிந்த எலுமிச்சைத் தோலைக் கொண்டே பர்னர்களின் மீதுள்ள இளகிய அழுக்குகளைத் தேய்க்கத் தொடங்குங்கள். முடிந்த பிறகு, பாத்திரம் தேய்க்கும் இரும்பு நார் கொண்டு நன்றாகத் தேய்த்து விடவும். முக்கியமாக, வாயு வெளிவரும் சிறிய துளைகளில் அடைப்புகள் இருந்தால் அதை கவனமாக நீக்கவும். இறுதியாக, சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி விடுங்கள்.

இப்போது உங்கள் கேஸ் பர்னர்கள் அழுக்குகள் நீங்கி, புதுசு போலப் பளபளப்பாக மாறியிருக்கும். 

இதையும் படியுங்கள்:
உங்க கேஸ் சிலிண்டர் Expire ஆகிடுச்சா? கண்டுபிடிப்பது எப்படி?
Gas Burner

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com