நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தும் பொய்!

நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தும் பொய்!

ண்டுபிடிப்புகள் சில மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, தொலைபேசி, மின்சாரம், விமானம் போன்றவற்றைக் கூறலாம். ஆனால், இன்னும் சில கண்டுபிடிப்புகள் மக்களுக்கு மிகவும் ஆபத்தானவையாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, சிகரெட், துப்பாக்கி, கண்ணிவெடி, அணுகுண்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆனால், இவை எல்லாவற்றையும் விட மனிதர்களின் வாழ்க்கைக்கு உலை வைக்கிற மற்றொன்றும் இருக்கிறது. அது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது! அதுதான் பொய்!

உண்மை அல்ல என்று தெரிந்து இருந்தும் ஒருவரை ஏமாற்றுவதற்காகக் கூறப்படுகிற தகவல்தான் பொய்! மதத் தலைவர்கள் பொய்களைக் கூறும்போது, அதனால் இன்னும் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல்வாதிகளும் பொய் சொல்லியிருக்கிறார்கள்; சொல்லி வருகிறார்கள்.

பொய் சொல்வதை இயல்பானதாகவும் வழக்கமானதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தவறுகளை அல்லது குற்றங்களை மூடி மறைப்பதற்காகவும் மக்கள் அடிக்கடி பொய் சொல்கிறார்கள். இப்படிப் பொய் சொல்வதால் கடைசியில் என்ன ஆகிறது தெரியுமா? ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை போய்விடுகிறது. அதோடு, அவ்விருவரின் நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

ஒருவர் வார்த்தையில் உண்மை இல்லை எனத் தெரிந்தால், அவர் எப்போது உண்மை பேசினாலும் அதை எவரும் உண்மை என ஏற்க மாட்டார்கள். அதனால் எப்போதும் உண்மையையே பேசுங்கள். நீங்கள் பொய் பேசினால் அந்தப் பொய்யை நீங்கள் காப்பற்ற நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கும். அதேசமயம், நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை எப்போதும் காப்பாற்றும். நீங்கள் ஒரு பொய் உரைத்தால் அந்தப் பொய்யை மறைக்க, பல பொய்கள் சொல்ல வேண்டி வரலாம். உண்மையை பேசும்போது அப்படி எதுவும் செய்ய வேண்டிய தேவை இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com