சிவப்பு நிற சருமம் வேண்டுமா? அதற்கு ஆசைப்படுபவர் ஒரே ஒரு சிட்டிகை குங்குமப்பூ பயன்படுத்தி பாருங்களேன் அசந்து போவீங்க..
சிகப்பாக நல்ல அழகுடன் மிளிர வேண்டும் என நினைக்கும் பெண்கள் குங்குமபூவை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே போதும் "ஆஹா" ஏன் ஆச்சர்யம் கொள்ள வைக்கும் பிரமிக்க வைக்கும் அழகை பெறலாமே!
குங்குமப்பூவின் விலை சற்று கூடுதல் தான் இருந்தாலும் தினமும் ஒரு சிட்டிகை அளவு பயன்படுத்தி வரும் பொழுது முகத்தில் தோன்றும் அனைத்து விதமான அழகு சம்பந்த பிரச்சனைகளை சரி செய்து விடலாம்.
அழகுநிலையத்திற்கு எவ்வளவோ செலவு செய்யும் நாம் இதற்கு செலவு செய்வது மிக குறைவான அளவே...!
அதே போல் குங்குமப்பூவை முகத்தில் தேய்க்கும் போது கண்களின் இமைமுடிகளும் வளரும். கண்களும் நல்ல வசீகர அழகுடன் காணப்படும். இதை விரல்நகங்களில் மீது தேய்க்கும் பொழுது நகங்கள் நல்ல பாலிஷ் ஆவது உடன் பூச்சிநகங்கள் கூட சரியாகி விடும். வெயிலினால் ஏற்படும் முக கருத்திட்டுகள், முகப்பருக்கள் போன்றவை கூட இந்த பேஸ்ட்டை தினமும் பயன்படுத்தும் பொழுது சரியாகி விடும்.
குங்குமப்பூவை வைத்து முக அழகை பெற:
ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்து அதில் சிறிதளவு குங்குமபூவை சேர்த்து ஊற விட வேண்டும். குங்குமப்பூவில் இருக்கும் சாறு முழுவதும்தண்ணீரில் இறங்கிய பிறகு அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து அதில்வெண்ணெய் கலந்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த பேஸ்டை இரவு தூங்கும் முன்பு உங்கள் முகத்தில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து மசாஜ் செய்து முகத்தை அலம்பிய பிறகு தூங்க செல்லலாம்.
இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முக வறட்சிபோன்றவை அனைத்தும் நீங்கி விடும். அது மட்டுமின்றி ஒரு சிலருக்கு முகம் நல்லவெண்மையாக இருக்கும் ஆனால் உதடு கருப்பாக இருக்கும். இந்த வெண்ணைசேர்த்த குங்குமப்பூ கலவையை தேய்க்கும் பொழுது முழு உதடும் நல்ல சிவப்பாகமாறி விடும்.
இதே குங்கும பூவை பவுடர் செய்து சிறிதளவு பசும்பாலில் குழைத்து பேஸ்ட்பதத்திற்கு வந்தவுடன் அதையும் இதே போல முகத்தில் தேய்த்து வரலாம். அப்படிசெய்யும் பொழுதும் நம்முடைய முகம் இயற்கையான பொலிவை பெறுவதுடன், நல்ல சிவப்பழகையும் பெறலாம்.
இதே குங்குமப் பூவே பாலில் கலந்து பருகி வரும் பொழுது முழு உடலுமே நல்ல ஒரு மினுமினுக்கு தன்மைக்கு மாறி விடும். ஆனால் இந்த குங்கும பூவை சிறிதளவு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அதிகமாக பயன்படுத்தும் பொழுது இது சிவப்பழகை கொடுப்பதற்கு பதிலாக நிறத்தை கருமையாக மாற்றி விடும் அபாயமும் உண்டு.