வானத்தில் பறக்கும் நிஜ கிறிஸ்துமஸ் தாத்தா: சுவிட்சர்லாந்தில் நடக்கும் அதிசயம்!

santa claus flying in switzerland
santa claus flying in switzerland
Published on

சுவிட்சர்லாந்தில், குறிப்பாக மாண்ட்ரூ (Montreux) நகரத்தின் கிறிஸ்மஸ் சந்தையில், பறக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா ஒரு பிரபலமான ஈர்ப்பாகும். டிசம்பர் மாதத்தில், ஜெனீவா எரிக்கு மேலே, வானத்தில் பறக்கும் தாத்தா மக்களை மகிழ்வித்து பரிசுகளை வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளை வழங்குவார். இது ஒரு மந்திர அனுபவமாகக் கருதப்படுகிறது. இது மாண்ட்ரூவின் கிறிஸ்துமஸ் சந்தையின் தனித்துவமான அம்சங்களில் ஒன்றாகும். அங்கு மக்கள் கூட்டமாக கூடி இந்த அற்புதக் காட்சியைக் கண்டு மகிழ்வார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தா தனது கலைமான்கள் பூட்டிய பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தில் (Sleigh) ஜெனீவா ஏரிக்கு மேலே சுமார் 385 மீட்டர் நீளமுள்ள கம்பி வட்டத்தில் (Cable) உயரத்தில் பறந்து செல்வார். அவர் பறக்கும்போது கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவதுடன் சில சமயங்களில் கிட்டார் வாசித்தும் பார்வையாளர்களை மகிழ்விப்பார்.

இதையும் படியுங்கள்:
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல் - 71 வயது தாத்தாவின் குரலில் மயங்கி, அவரை மணந்த பாட்டி!
santa claus flying in switzerland

இந்த நிகழ்ச்சி 2025 நவம்பர் 20 முதல் டிசம்பர் 24 வரை தினமும் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா ஜெனீவா ஏரியின் கரையில் தனது பனிச்சறுக்கு வண்டியில் பறந்து மக்களை மகிழ்விப்பார். இது பார்வையாளர்களுக்கு ஒரு மாயாஜால அனுபவத்தை அளிக்கிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியை இலவசமாக பார்க்கலாம். நவம்பர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் 24 வரை மாலை 4, 5, 6, 7 மணி போன்ற நேரங்களில் நடைபெறும் (வார இறுதி நாட்கள் கூடுதல் நேரம் நடைபெறும்). இது ஒரு உண்மையான அனுபவம் போல தோற்றமளிக்கும் வகையில், ஏரியின் மீது பறந்து செல்லும் தாத்தா அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருவார்.

இதையும் படியுங்கள்:
அறிவியல் சொல்லும் 'அதிர்ஷ்டப் பெண்' ரகசியம்: மூளையை மாற்றியமைக்கும் உளவியல் நன்மைகள்!
santa claus flying in switzerland

மாண்ட்ரூவின் கிறிஸ்துமஸ் சந்தையில் பறக்கும் தாத்தா மட்டுமின்றி, ஃபொன்ட்யூ, ராக்கெட் போன்ற சுவிஸ் உணவுகள், ஃபெர்ரிஸ் வீல், பனிச்சறுக்கு போன்ற பல அம்சங்களும் உள்ளன. ஜெனீவா ஏரிக்கரை சந்தை சதுக்கத்திற்கு அருகிலுள்ள பெர்ரிஸ் வீல் (Ferris Wheel) முன்பாக இவர் பாட்டு பாடி குழந்தைகளை மகிழ்விப்பார்.

இது ஒரு பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பகுதியாக உள்ளது. மேலும், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இதைக் காண வருகிறார்கள். இந்நிகழ்வைத் தவிர மாண்ட்ரூக்ஸ் நகரில் மலை உச்சியில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தாத்தாவின் வீட்டிற்கு (Rochers-de-Naye) ரயிலில் சென்று அவரை நேரில் சந்திக்கவும் வசதி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com